சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாக அறிவிப்பு
Send us your feedback to audioarticles@vaarta.com
கோலிவுட் திரையுலகில் கடந்த சில ஆண்டுகளாகவே இரண்டாம் பாக சீசன் தொடர்ந்து வருகிறது. வெற்றி படங்கள் மட்டுமின்றி ஒருசில தோல்வி படங்களும் இரண்டாம் பாகமாக உருவாகி வருகிறது
இந்த நிலையில் இயக்குனர் ரவிகுமார் இயக்கத்தில் கடந்த 2015ஆம் ஆண்டு விஷ்ணுவிஷால், மியா நடிப்பில் வெளியான 'இன்று நேற்று நாளை' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
'இன்று நேற்று நாளை 2' படத்தை இயக்குனர் ரவிகுமாரின் உதவியாளர் கார்த்திக் இயக்கவுள்ளார். இந்த படத்தை திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் சிவி குமார் தயாரிக்கவுள்ளார். ஜிப்ரான் இசையில் தினேஷ்குமார் ஒளிப்பதிவில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் செப்டம்பர் முதல் தொடங்கவுள்ளது. முதல் பாகத்தில் நடித்த கருணாகரன் இந்த படத்திலும் நடிக்கவுள்ளார். இந்த படத்தில் நடிக்கும் மற்ற நட்சத்திரங்கள் குறித்த விபரங்கள் மிக விரைவில் அறிவிக்கப்படவுள்ளன.
'இன்று நேற்று நாளை' முதல் பாகத்தை இயக்கிய இயக்குனர் ரவிகுமார் தற்போது சிவகார்த்திகேயன் படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
We are exited to announce #Indru_Nettru_Naalai_2 a perfect sequel penned by @Ravikumar_Dir directing by his associate #spkarthic dop @dineshkrishnanb music by @GhibranOfficial Shoot starting on September Other cast and crew details soon @ThirukumaranEnt @onlynikil @actorkarunan
— C V Kumar (@icvkumar) June 26, 2019
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com