இந்திரஜா ரோபோ சங்கர் கர்ப்பமா? மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் சொன்ன குட் நியூஸ்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இந்திரஜா ரோபோ சங்கர் தனக்கு எப்போது குழந்தை பிறக்கும் என்பது குறித்த தகவலை தெரிவித்துள்ளார்.
விஜய் டிவியில் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சி கடந்த வாரம் தொடங்கப்பட்டது என்பதும் இதில் 11 ஜோடிகள் கலந்து கொண்டிருப்பதாக அறிவிக்கப்பட்டது என்பது தெரிந்தது.
இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா ரோபோ சங்கர், கார்த்திக் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இருவரும் இந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்களாக கலந்து கொண்டனர்.
அப்போது நடுவர்களில் ஒருவரான நடிகை ராதா, குழந்தை எப்போது என்று கேட்ட கேள்விக்கு பதிலளித்த இந்திரஜா, ‘எங்கள் இரண்டு வீட்டிலும் ஒரே ஒரு குழந்தை என்பதால் இரண்டு வீட்டாரும் எங்கள் குழந்தையை எதிர்பார்க்கின்றனர். எங்களுக்கும் அதுதான் விருப்பம். சீக்கிரமே எங்களுக்கு குழந்தை பிறக்கும் என்றும் கூறியுள்ளார்.
இதை அடுத்து குழந்தை பிறப்பை தள்ளி போடும் பெண்கள் மத்தியில் நீங்கள் உடனே குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்திருப்பதில் சந்தோஷம் என்று நடுவர்கள் இருவரும் தெரிவித்தனர். எனவே விரைவில் இந்திரஜாவுக்கு குழந்தை பிறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments