சோகமான செல்ஃபிக்களை 7 கோடிக்கு விற்ற மாணவன்… ஆச்சர்யத் தகவல்!

  • IndiaGlitz, [Tuesday,January 18 2022]

டிஜிட்டல் உலகில் நடக்கும் சில சம்பவங்கள் உண்மையிலேயே நம்மை ஆச்சர்யப்படுத்தும் அளவிற்கு விசித்திரத்தைக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில் ஒரு மாணவன் தன்னுடைய சோகமான செல்ஃபி புகைப்படங்களை கிட்டத்தட்ட 7 கோடிக்கு விற்பனை செய்திருக்கும் சம்பவம் உலக அளவில் தற்போது கவனம் பெற்றிருக்கிறது.

இந்தோனேசியாவை சேர்ந்த சுல்தான் குஸ்டாப் அல் கோசாலி எனும் 22 வயதான மாணவன் செமராஸ்கில் பகுதியில் உள்ள பல்கலைக்கழகத்தில் பயின்று வந்துள்ளார். இவர் கடந்த 2017 – 2021 ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் படிக்கும்போது தனது தினசரி நினைவுகளை சேகரித்து வைப்பதற்காக தினமும் தன்னுடைய லேப்டாப் முன்னாள் நின்று புகைப்படங்களை எடுத்துள்ளார். உணர்ச்சியே இல்லாமல் இப்படி அவர் எடுத்த போட்டோக்களை GhoZali Every day எனும் பெயரில் Time Lapse செய்து Open Sea எனும் வெப்சைட்டில் தற்போது பதிவேற்றம் செய்துள்ளார்.

இதையடுத்து கோசாலி 1,000 புகைப்படங்களை பதிவேற்றி ஒவ்வொரு புகைப்படத்திற்கும் தலா ரூ.3 டாலர் என்று விலை நிர்ணயமும் செய்திருக்கிறார். முதலில் சோகமே வடிவான இவரது புகைப்படங்களை யாரும் வாங்குவதற்கு முன்வரவில்லை. ஆனால் நாளடைவில் கவனம் பெற்ற கோசாலியின் புகைப்படம் 0.247 கிரிப்டோ கரன்சிக்கு விற்பனையாகி இருக்கிறது. இதைத்தொடர்ந்து ஜனவரி 14 ஆம் தேதி முதல் கிரிப்டே கரன்சியின் விலை அதிகரித்து கோசாலியின் ஒவ்வொரு புகைப்படமும் கிட்டத்தட்ட 806 என விற்பனையாகி இறுதியில் 317 கிரிப்டோ அளவிற்கு விற்பனை செய்யப்பட்டு இருக்கிறது.

இதனால் கோசாலியின் புகைப்படங்கள் தற்போது 1 மில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு விற்பனை செய்யப்பட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து கருத்து தெரிவித்து இருக்கும் கோசாலி என்னுடைய புகைப்படங்களை நான் சில ஆண்டுகள் வரை நீக்க மாட்டேன், இதை நல்ல காரியங்களுக்கு மட்டும் பயன்படுத்துங்கள், ஒருவேளை தவறான செயலுக்கு பயன்படுத்தினால் எனது பெற்றோர் வருத்தப்படுவார்கள் எனக் கூறியதோடு 1 மில்லியன் பணத்தை வைத்து அனிமேஷன் லேப் வைக்கப் போவதாகவும் அவர் குறிப்பிட்டு உள்ளார்.

கொரோனா காலத்தில் டிஜிட்டல் உலகிற்கு அடிமையாகி வரும் இளைஞர்கள் பலரும் டிக்டாக், யூடியூப் போன்றவற்றில் வீடியோக்களைப் போட்டு தங்களுடைய வருமானத்தை ஈட்டிவருகின்றனர். ஆனால் கோசாலி எந்த மெனக்கெடலும் இல்லாமல் தனது சோகமே உருவான முகத்தை விற்று 7 கோடி சம்பாதித்து இருப்பது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

More News

கமல்ஹாசன் டிஸ்சார்ஜ்: படப்பிடிப்புக்கு செல்வது எப்போது?

உலகநாயகன் கமல்ஹாசன் நேற்று சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சற்று முன்னர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சூர்யாவின் 'ஜெய்பீம்' படத்திற்கு கிடைத்த ஆஸ்கார் கெளரவம்!

சூர்யா நடித்த 'ஜெய்பீம்' திரைப்படம் சமீபத்தில் வெளியானது என்பதும் இந்த திரைப்படம் தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் தெரிந்ததே 

சமந்தா-நாகசைதன்யா, இமான்-மோனிகா, தனுஷ்-ஐஸ்வர்யா: திரையுலக பிரபலங்களின் திருமண முறிவுகள்

நாடு முழுவதும் நீதிமன்றங்களில் தினமும் நூற்றுக்கணக்கான திருமண முறிவுகள் குறித்த வழக்குகள் விசாரணைக்கு வந்த போதிலும் திரையுலக பிரபலங்களின் திருமண முறிவுகள் மட்டும் வெளிச்சத்துக்கு

சூர்யாவின் 'எதற்கும் துணிந்தவன்' சென்சார் மற்றும் ரன்னிங் டைம் தகவல்கள்!

சூர்யா நடித்த 'எதற்கும் துணிந்தவன்' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பதும் இந்த படம் வரும் பிப்ரவரி மாதம் 4ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே சன் பிக்சர்ஸ் நிறுவனம்

தனுஷ் விவாகரத்து அறிவிப்புக்கு செளந்தர்யா ரஜினியின் ரியாக்சன்!

பிரபல நடிகர் தனுஷ் நேற்று தனது மனைவி ஐஸ்வர்யாவை பிரிவதாக அறிவித்து இருப்பது திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது