சோகமான செல்ஃபிக்களை 7 கோடிக்கு விற்ற மாணவன்… ஆச்சர்யத் தகவல்!
Send us your feedback to audioarticles@vaarta.com
டிஜிட்டல் உலகில் நடக்கும் சில சம்பவங்கள் உண்மையிலேயே நம்மை ஆச்சர்யப்படுத்தும் அளவிற்கு விசித்திரத்தைக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில் ஒரு மாணவன் தன்னுடைய சோகமான செல்ஃபி புகைப்படங்களை கிட்டத்தட்ட 7 கோடிக்கு விற்பனை செய்திருக்கும் சம்பவம் உலக அளவில் தற்போது கவனம் பெற்றிருக்கிறது.
இந்தோனேசியாவை சேர்ந்த சுல்தான் குஸ்டாப் அல் கோசாலி எனும் 22 வயதான மாணவன் செமராஸ்கில் பகுதியில் உள்ள பல்கலைக்கழகத்தில் பயின்று வந்துள்ளார். இவர் கடந்த 2017 – 2021 ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் படிக்கும்போது தனது தினசரி நினைவுகளை சேகரித்து வைப்பதற்காக தினமும் தன்னுடைய லேப்டாப் முன்னாள் நின்று புகைப்படங்களை எடுத்துள்ளார். உணர்ச்சியே இல்லாமல் இப்படி அவர் எடுத்த போட்டோக்களை GhoZali Every day எனும் பெயரில் Time Lapse செய்து Open Sea எனும் வெப்சைட்டில் தற்போது பதிவேற்றம் செய்துள்ளார்.
இதையடுத்து கோசாலி 1,000 புகைப்படங்களை பதிவேற்றி ஒவ்வொரு புகைப்படத்திற்கும் தலா ரூ.3 டாலர் என்று விலை நிர்ணயமும் செய்திருக்கிறார். முதலில் சோகமே வடிவான இவரது புகைப்படங்களை யாரும் வாங்குவதற்கு முன்வரவில்லை. ஆனால் நாளடைவில் கவனம் பெற்ற கோசாலியின் புகைப்படம் 0.247 கிரிப்டோ கரன்சிக்கு விற்பனையாகி இருக்கிறது. இதைத்தொடர்ந்து ஜனவரி 14 ஆம் தேதி முதல் கிரிப்டே கரன்சியின் விலை அதிகரித்து கோசாலியின் ஒவ்வொரு புகைப்படமும் கிட்டத்தட்ட 806 என விற்பனையாகி இறுதியில் 317 கிரிப்டோ அளவிற்கு விற்பனை செய்யப்பட்டு இருக்கிறது.
இதனால் கோசாலியின் புகைப்படங்கள் தற்போது 1 மில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு விற்பனை செய்யப்பட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து கருத்து தெரிவித்து இருக்கும் கோசாலி என்னுடைய புகைப்படங்களை நான் சில ஆண்டுகள் வரை நீக்க மாட்டேன், இதை நல்ல காரியங்களுக்கு மட்டும் பயன்படுத்துங்கள், ஒருவேளை தவறான செயலுக்கு பயன்படுத்தினால் எனது பெற்றோர் வருத்தப்படுவார்கள் எனக் கூறியதோடு 1 மில்லியன் பணத்தை வைத்து அனிமேஷன் லேப் வைக்கப் போவதாகவும் அவர் குறிப்பிட்டு உள்ளார்.
கொரோனா காலத்தில் டிஜிட்டல் உலகிற்கு அடிமையாகி வரும் இளைஞர்கள் பலரும் டிக்டாக், யூடியூப் போன்றவற்றில் வீடியோக்களைப் போட்டு தங்களுடைய வருமானத்தை ஈட்டிவருகின்றனர். ஆனால் கோசாலி எந்த மெனக்கெடலும் இல்லாமல் தனது சோகமே உருவான முகத்தை விற்று 7 கோடி சம்பாதித்து இருப்பது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
my goal of taking pictures of myself for 5 years is just for this video
— Ghozali_Ghozalu (@Ghozali_Ghozalu) January 12, 2022
and in the future for this year hopefully I will graduate from college and be able to take my graduation photo, it will be a cool triphttps://t.co/sBdKmtzvXe
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com