ரத்தக் கலரில் வெள்ளப் பெருக்கு? விசித்திர சம்பவத்தால் அலறும் மக்கள்!
- IndiaGlitz, [Tuesday,February 09 2021]
இந்தோனேஷியாவில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த மழையால் பெக்கலோங்கன் நகர் முழுவதும் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு இருக்கிறது. ஆனால் இந்த வெள்ளப் பெருக்கு ரத்தச் சிவப்பு கலரில் இருப்பதுதான் மக்களை பீதி அடைய வைத்து இருக்கிறது.
பெக்கலோங்கன் நகர் முழுவதும் துணிகளுக்கு இயற்கையாக சாயம் போடும் மெழுகுகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறதாம். இந்நிலையில் கடந்த சில தினங்களாக கொட்டித் தீர்க்கும் மழை நீர் முழுவதும் அந்நகரில் உள்ள ஜெங்க்காட் எனும் பகுதியில் பெருக்கெடுத்து ஓடத் தொடங்கி இருக்கிறது. ஜெங்க்காட்டில் இயங்கி வந்த பல சாய மெழுகு நிறுவனங்களில் இந்த வெள்ளநீர் புகுந்ததால் தற்போது வெள்ளப் பெருக்கு முழுவதும் சிவப்பு கலராக மாறி இருக்கிறது.
இந்தத் தகவல் கடந்த சில தினங்களாக சமூக வலைத்தளத்தில் கடும் வைரலாகி வருகிறது. இதேபோன்று இந்தோனேஷியாவில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பச்சை வெள்ளப் பெருக்கும் ஓடியது. காரணம் அங்கு செயல்பட்டு வந்த ஒரு உரம் தயாரிக்கும் ஆலையில் வெள்ளநீர் புகுந்ததால் தண்ணீர் முழுவதும் பச்சையாக மாறி இருக்கிறது. இந்நிலையில் இந்தோனேஷியாவில் இதுபோன்ற சம்பவங்களுக்கு பஞ்சமே இருக்காது என்றும் சிலர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.