ABCD-எழுத்துகளையே பெயராக வைத்த தம்பதி… விழிபிதுங்கும் மகன்!

  • IndiaGlitz, [Wednesday,October 27 2021]

தெற்கு ஆசிய நாடுகளுள் ஒன்றான இந்தோனேசியாவை சேர்ந்த ஒரு தம்பதி தன்னுடைய குழந்தைக்கு ஆங்கில ஆல்ஃபாபெட்டை (ABCDEF GHIJK ZUZU) பெயராக வைத்து அசர வைத்துள்ளனர். இந்தப் பெயரைப் பார்த்த சிலர் பாவம் அந்தச் சிறுவன் என்று வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.

இந்தோனேசியாவில் வசிக்கும் ஜுஹ்ரே- ஜுல்பமி தம்பதிகள் தங்களுக்கு பிறந்த குழந்தைக்கு ஆங்கில எழுத்துகளை பெயராக வைக்க வேண்டும் என விரும்பியுள்ளனர். எனவே ABCDEF GHIJK ZUZU எனப் பெயரிட்டுள்ளனர்.

இதையடுத்து 12 வயதாகும் சிறுவன் ZUZU தனது முழுபெயரையும் பள்ளியில் எழுதியிருக்கிறான். இதைப் பார்த்து வகுப்பு தோழர்கள் அனைவரும் அவனைக் கேலி செய்துள்ளனர். அதோடு போகும் இடங்களிலெல்லாம் ZUZUவின் பெயர் கேலி செய்யப்பட்டு இருக்கிறது. இதனால் ZUZU தன்னுடைய பெற்றோரிடம் முறையிட்டு இருக்கிறான். இதற்கு விளக்கம் அளித்த அவனது பெற்றோர் ZUZU என்பது எங்கள் இருவரின் முதல் எழுத்து. எனவே பிறக்கும் அனைத்துக் குழந்தைகளுக்கும் இதே பெயரை வைக்க விரும்புகிறோம்.

முதலில் பிறந்த குழந்தைக்கு ABCDEF GHIJK ZUZU, அடுத்து பிறக்கும் குழந்தைக்கு NOPQ என்றும் RSTUV எனப் பெயர் வைக்க விரும்புவதாகவும் தெரிவித்து உள்ளனர். விருப்பம் இருக்கலாம், அதற்காக இப்படியா? என்று சிலர் அந்தத் தம்பதிகளை விமர்சித்து வருகின்றனர்.

More News

ரஜினியுடன் விருது வாங்கியது எனது அதிர்ஷ்டம்: விஜய்சேதுபதி

67 வது தேசிய விருதுகள் நேற்று வழங்கப்பட்ட நிலையில் இந்த விருது வழங்கும் விழாவில் ஒருசில தமிழ் திரை உலக பிரபலங்களுக்கும் விருதுகள் கிடைத்தன என்பது குறிப்பிடத்தக்கது. கலைப்புலி எஸ் தாணு

ஷாருகான் படத்தில் இருந்து விலகுகிறாரா நயன்தாரா? படக்குழுவினர் விளக்கம்

பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிக்கும் 'லயன்' என்ற திரைப்படத்தை அட்லீ இயக்கி வருகிறார் என்பதும் இந்த படத்தின் முக்கிய வேடத்தில் நயன்தாரா நடித்து வருகிறார்

'இது வேத வாக்கு': சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'அண்ணாத்த' டிரைலர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'அண்ணாத்த' திரைப்படத்தின் டிரைலர் இன்று வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் சற்றுமுன் டிரைலர் வீடியோ வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடதக்கது.

பலருக்கு விஷம் கொடுத்தேன்…. டாக்டர் அளித்த வாக்குமூலத்தால் அதிர்ச்சி!

நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த மனநல மருத்துவர் ஒருவர் 100க்கும்

சைட்டில் பெண்களே இல்லை? டேட்டிங் ஆப் மீது வழக்குத் தொடுத்த பலே இளைஞர்!

அமெரிக்காவை சேர்ந்த இளைஞர் ஒருவர், தான் பயன்படுத்தும் டேட்டிங் ஆப்பில் பெண்களே இல்லை, தரவுகளை