ABCD-எழுத்துகளையே பெயராக வைத்த தம்பதி… விழிபிதுங்கும் மகன்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தெற்கு ஆசிய நாடுகளுள் ஒன்றான இந்தோனேசியாவை சேர்ந்த ஒரு தம்பதி தன்னுடைய குழந்தைக்கு ஆங்கில ஆல்ஃபாபெட்டை (ABCDEF GHIJK ZUZU) பெயராக வைத்து அசர வைத்துள்ளனர். இந்தப் பெயரைப் பார்த்த சிலர் பாவம் அந்தச் சிறுவன் என்று வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.
இந்தோனேசியாவில் வசிக்கும் ஜுஹ்ரே- ஜுல்பமி தம்பதிகள் தங்களுக்கு பிறந்த குழந்தைக்கு ஆங்கில எழுத்துகளை பெயராக வைக்க வேண்டும் என விரும்பியுள்ளனர். எனவே ABCDEF GHIJK ZUZU எனப் பெயரிட்டுள்ளனர்.
இதையடுத்து 12 வயதாகும் சிறுவன் ZUZU தனது முழுபெயரையும் பள்ளியில் எழுதியிருக்கிறான். இதைப் பார்த்து வகுப்பு தோழர்கள் அனைவரும் அவனைக் கேலி செய்துள்ளனர். அதோடு போகும் இடங்களிலெல்லாம் ZUZUவின் பெயர் கேலி செய்யப்பட்டு இருக்கிறது. இதனால் ZUZU தன்னுடைய பெற்றோரிடம் முறையிட்டு இருக்கிறான். இதற்கு விளக்கம் அளித்த அவனது பெற்றோர் ZUZU என்பது எங்கள் இருவரின் முதல் எழுத்து. எனவே பிறக்கும் அனைத்துக் குழந்தைகளுக்கும் இதே பெயரை வைக்க விரும்புகிறோம்.
முதலில் பிறந்த குழந்தைக்கு ABCDEF GHIJK ZUZU, அடுத்து பிறக்கும் குழந்தைக்கு NOPQ என்றும் RSTUV எனப் பெயர் வைக்க விரும்புவதாகவும் தெரிவித்து உள்ளனர். விருப்பம் இருக்கலாம், அதற்காக இப்படியா? என்று சிலர் அந்தத் தம்பதிகளை விமர்சித்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout