பார்ட்னர் ஷிப்பில் இந்திய-அமெரிக்க கப்பற்படை!!! அரண்டுபோன சில நாடுகள்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்திய – சீன எல்லைப் பகுதியில் ஏற்பட்ட குழப்பம் கடந்த சில மாதங்களாக இருநாடுகளிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் பல்வேறுகட்ட பேச்சு வார்த்தைக்குப் பின்னர் தற்போது தற்காலிக முடிவு எட்டப்பட்டு இருக்கிறது. ஆனாலும் நிரந்தரத் தீர்வு காணப்படாத நிலையில் இந்த விவகாரம் இருநாடுகளிடையே பொருளாதாரம் மற்றும் அரசியல் சூழல்களில் சிக்கலை ஏற்படுத்தும் வகையில் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதையடுத்து இந்தியாவிற்கு ஆதரவாக அமெரிக்கா நிற்கும் என்றும் இருநாட்டு மக்களின் அமைதிக்கும் நாங்கள் துணையாக நிற்போம் என்றும் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வெளிப்படையான அறிக்கை வெளியிட்டார். அதோடு சீனாவால் பாதிக்கப்படும் நாடுகளுக்கு நாங்கள் துணை நிற்போம் என்று அந்நாட்டின் வெளியுறவு செய்தி தொடர்பாளர் மைக் பாம்பியா அறிக்கை வெளியிட்டு இருந்தார்.
இந்திய – சீன எல்லை விவகாரத்தில் அமெரிக்கா வெளிப்படையாக இந்தியாவிற்கு ஆதரவு தெரிவித்து வருவதை உலக நாடுகள் பார்த்துக் கொண்டு இருக்கின்றன. இதனால் சீனாவிற்கு எதிர்ப்பு வலுவடைந்து வருவதை ஊடகங்கள் எடுத்துக் காட்டி வந்தன. இந்நிலையில் தென் சீன கடல் பகுதியில் ஏற்பட்டு இருக்கும் போர்ச் சூழலிலும் அமெரிக்கா இந்தியாவோடு துணை நிற்கும் என எதிர்ப்பார்ப்பு எழுந்து இருக்கிறது. தென் சீனக் கடல் பகுதியில் பல ஆண்டுகளாக சீனா ஆதிக்கம் செலுத்தி வருவதாக மலேசியா, திபெத், பிலிப்பைன்ஸ், ஜப்பான், அமெரிக்கா போன்ற நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றன. அந்த விவகாரம் தற்போது தென் சீனக் கடல் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. தற்போது சீனாவின் ஆதிக்கத்தை எதிர்ப்பு பல நாடுகளின் கப்பற்படைகள் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட விருப்பம் தெரிவித்து வரும் சூழலை எட்டி இருக்கின்றன.
பல மாதங்களாக அமெரிக்கா தென் சீனக் கடல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றன. கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இந்தியாவின் கப்பற்படையும் அப்பகுதியில் ரோந்தில் ஈடுபட விருப்பம் தெரிவித்து இருப்பதாக பிலிப்பைன்ஸ் வெளியுறவுத் துறை அமைச்சர் தெரிவித்து இருந்தார். இந்நிலையில் இந்தியாவின் கப்பற்படை அப்பகுதிக்கு செல்லுமா என எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டது. அதையடுத்து தற்போது அந்தமான் பகுதியில் அமெரிக்காவின் மிகப்பெரிய விமானம் தாங்கிய போர்க் கப்பலான யு.எஸ்.எஸ் நிமிட்ஸ் உடன் இணைந்து இந்தியக் கப்பற் படை வீரர்கள் போர்ப் பயிற்சியில் ஈடுபட்டு வருவதாகச் செய்திகள் வெளியாகி இருக்கிறது.
அமெரிக்காவின் யு.எஸ்.எஸ் நிமிட்ஸ் மற்றும் யு.எஸ்.எஸ் ரொனால்ட் ரீகன் என்ற இரண்டு கப்பலிலும் சுமார் 12 ஆயிரம் கப்பற் படை வீரர்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. அதோடு நிமிட்ஸ் போர்க் கப்பலில் 120 விமானங்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இத்தகைய சக்தி வாய்ந்த கப்பற் படையில் அமெரிக்கா மற்றும் இந்திய கப்பற் படை வீரர்கள் தற்போது போர்ப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பயிற்சி அந்தமான் பகுதியில் உள்ள மலாக்கா பகுதியில் நடைபெற்று வருவதாக இந்தியாவின் வெளிவிவகார துறை அமைச்சர் அனுராக் ஸ்ரீவஸ்தவா உறுதிப்படுத்தி இருக்கிறார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout