இந்திரஜா ரோபோ சங்கரின் 5 ஆம் மாதம் பூச்சூடல் விழா.. நெகிழ்ச்சி பதிவு.. வைரல் புகைப்படங்கள்..!

  • IndiaGlitz, [Monday,October 21 2024]

நடிகர் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட நிலையில், அவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கர்ப்பமானார் என்ற தகவல் வெளியானது. இந்த நிலையில் ஐந்தாவது மாதத்தில் வளைகாப்பு திருவிழா நடந்துள்ள நிலையில், இது குறித்த புகைப்படத்தை இந்திரஜா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து, நெகிழ்ச்சியுடன் கூறியது அனைவரையும் ரசிக்கும் வகையில் உள்ளது.

ரோபோ சங்கரின் மகளும் நடிகையுமான இந்திரஜா, கார்த்திக் என்ற உறவினரை கடந்த மார்ச் மாதம் திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணம் மிகவும் பிரமாண்டமாக நடந்தது என்பதும், திருமணத்திற்கு பின்னால் கமல்ஹாசன் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்களிடம் இந்த ஜோடி வாழ்த்து பெற்றனர் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில். திருமணமான சில மாதங்களில், இந்திரஜா தான் கர்ப்பமாக இருப்பதை அறிவித்த நிலையில், அவர் மிஸ்டர் & மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் இருந்து விலகினார். தற்போது, அவருக்கு ஐந்தாவது மாத வளைகாப்பு நிகழ்ச்சி நடந்துள்ள நிலையில், இது குறித்து அவர் கூறியதாவது:

புளிப்பு சுவை பிடித்து குழந்தையின் இதயத்துடிப்பை அறிந்து ரசித்த நாள்...5 ஆம் மாதம் பூச்சூடல் விழா’ என்று கேப்ஷனாக பதிவு செய்துள்ளார். மேலும், இந்திரஜாவின் அம்மா உள்பட பலரும் அவருக்கு வளையல் மாட்டி விட்ட புகைப்படங்களும், ஐந்தாம் மாதம் சீர் கொடுத்த புகைப்படமும் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இந்திரஜாவுக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.