உலக வங்கி தலைவர் ஆகிறாரா சென்னை பெண்

  • IndiaGlitz, [Wednesday,January 16 2019]

அமெரிக்காவில் உள்ள வாஷிங்டன் நகரில் உள்ள உலக வங்கியின் தலைவராக இருந்து ஜிம் யாங் கிம் என்பவர் இம்மாத இறுதியில் பதவி விலக இருப்பதாக அறிவித்திருக்கும் நிலையில் புதிய தலைவரை தேர்வு செய்யும் பணிகள் தொடங்கியுள்ளது.

இந்த பதவிக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் மகள் இவாங்கா டிரம்ப், ஐ.நா.வுக்கான அமெரிக்க முன்னாள் தூதரும், இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான நிக்கி ஹாலே உள்பட ஒருசிலர் பரிசீலனை செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் பெப்சி நிறுவனத்தின் முதல் பெண் சி.இ.ஓஆக பதவி வகித்தவரும் சென்னையை சேர்ந்தவருமான இந்திரா நூயியை இந்த பதவிக்கு முன்னிறுத்த வெள்ளை மாளிகை பரிசீலனை செய்து வருவதாகவும், இவாங்கா டிரம்ப், இந்திரா நூயிக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் அமெரிக்க முன்னணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

சென்னையை சேர்ந்த 63 வயது இந்திரா நூயி, பெப்சி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக 12 வருடமாக பதவி வகித்தவர் என்பதும், கடந்த ஆண்டுதான் அப்பொறுப்பில் இருந்து இந்திரா நூயி பதவி விலகினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

கட்-அவுட், பேனர் வைத்து கெத்து காட்ட வேண்டிய அவசியம் இல்லை: சிம்பு

கோலிவுட் திரையுலகில் பெரிய நட்சத்திரங்களில் படங்கள் வெளியாகும்போது கட் அவுட், பேனர் வைப்பது பாலாபிஷேகம் செய்வது என்பது ரசிகர்களால்

28 நாளில் 18 ரிலீஸ்: பிப்ரவரியில் வரிசை கட்டும் படங்கள்

இம்மாதம் சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'பேட்ட' மற்றும் தல அஜித்தின் 'விஸ்வாசம்' ஆகிய இரண்டு பெரிய படங்கள் பொங்கல் விருந்தாக வெளியாகியுள்ளது.

உலகின் பெஸ்ட் ஃபினிஷர்களில் ஒருவர்: தினேஷ் கார்த்திக்கை பாராட்டிய பிரபல வீரர்

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் நேற்று நடைபெற்ற 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி கொடுத்த 299 என்ற இமாலய இலக்கை இந்திய அணி 49.2 ஓவர்களில் எட்டி வெற்றிக்கனியை பறித்தது

'இந்தியன் 2' படத்தில் இணையும் பிரபல ஹீரோ

கமல்ஹாசன், காஜல் அகர்வால் நடிப்பில் ஷங்கர் இயக்கும் 'இந்தியன் 2' திரைப்படம் இம்மாதம் தொடங்கவுள்ள நிலையில் இந்த படத்தில் நடிக்கும் நடிகர், நடிகையர் மற்றும் டெக்னீஷியன்கள் கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.

தனுஷ், சிம்பு பட நடிகையின் திருமண அறிவிப்பு

கடந்த 2010ஆம் ஆண்டு தெலுங்கில் ராணா நடிப்பில் வெளியான 'லீடர்' படத்தில் நாயகியாக அறிமுகமான நடிகை ரிச்சா அதன் பின் தனுஷ் நடித்த 'மயக்கமென்ன', சிம்பு நடித்த 'ஒஸ்தி' உள்பட ஒருசில படங்களில் நடித்தார்.