மிஸஸ் வேர்ல்ட் போட்டியில் இந்திய அழகி சாதனை… சர்வதேச அளவில் அங்கீகாரம்!
- IndiaGlitz, [Tuesday,January 18 2022]
அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் மாகாணத்தில் நடைபெற்ற மிஸஸ் வேர்ல்ட் 2022 போட்டியில் இந்தியாவை சேர்ந்த அழகி ஒருவர் சிறந்த தேசிய உடைக்கான சுற்றில் வெற்றிப்பெற்றுள்ளார். இதனால் இந்தியப் பாரம்பரிய முறையில் தயாரிக்கப்பட்ட உடையானது தற்போது சர்வதேச அளவில் புது கவனம் பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்தியாவை சேர்ந்த நவ்தீப் கவுர் என்பவர் கடந்த 2021 ஆம் ஆண்டில் மிஸஸ் இந்தியா வேர்ல்ட் போட்டியில் வெற்றிப்பெற்றார். இதையடுத்து இந்தியாவை சர்வதேச அளவில் பறைச்சாற்றிவந்த அவர் தற்போது 2022 மிஸஸ் வேர்ல்ட் போட்டியிலும் மற்றொரு சாதனையை படைத்துள்ளார்.
அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் மாகாணத்தில் மிஸஸ் வேர்ல்ட் போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ளது. இந்தப் போட்டியில் சிறந்த தேசிய உடைக்கான சுற்றில் இந்தியாவை சேர்ந்த நவ்தீப் கவுர் வெற்றிப்பெற்றுள்ளார். நவ்தீப் கவுர் இந்தப் போட்டிக்காக பாம்பு போன்ற உருவம் கொண்ட தங்க ஆடையை அணிந்திருத்தார். மேலும் இந்த ஆடையில் இந்தியப் பாராம்பரியம் ததும்யிருந்தது. அதோடு வலிமை, சக்தி என்ற பொருளில் வடிவமைக்கப்பட்ட இந்த தங்க ஆடையை எக்கி ஜாஸ்மின் என்பவர் உருவாக்கியதாகவும் கூறப்படுகிறது.