மிஸ் யுனிவர்ஸ்… 20 வருடங்களுக்குப் பிறகு இந்தியாவிற்கு கிடைத்த அங்கீகாரம்!

  • IndiaGlitz, [Monday,December 13 2021]

2021 ஆம் ஆண்டின் மிஸ் யுனிவர்ஸ் ஆக பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த 21 வயதான இளம்பெண் ஹர்னாஸ் கவுர் சாந்து தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். 20 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவிற்கு இந்த அங்கீகாரம் கிடைத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேல் நாட்டின் சுற்றுலா தளமான எய்லட் நகரில் 2021 ஆம் ஆண்டிற்கான மிஸ் யுனிவர்ஸ் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் 80 நாடுகளை சேர்ந்த இளம் அழகிகள் கலந்துகொண்டனர். கடுமையான போட்டிகளுக்கு நடுவே இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த 21 வயதான இளம்பெண் ஹர்னாஸ் கவுர் சாந்து, மிஸ் யுனிவர்ஸ் ஆக தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளார்.

கடந்த 2017 ஆம் ஆண்டில் மிஸ் சண்டிகர் போட்டியில் கலந்து கொண்டு வெற்றிப்பெற்ற ஹர்னாஸ் கவுர் அதற்குப் பிறகு பல்வேறு போட்டிகளில் அழகிப்பட்டம் வென்றவர். தற்போது மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வெற்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்திருக்கிறார். இதற்கு முன்பு கடந்த 2000-இல் இந்தியாவைச் சேர்ந்த லாரா தத்தா இந்தப் போட்டியில் வெற்றிப்பெற்றதும் குறிப்பிடத்தக்கது.