மரணப்பயத்தை காட்டிவிட்ட இந்திய இளம் வீரர்கள்… குவியும் வாழ்த்து மழை!

19 வயதுடையோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 8 ஆவது முறையாக இறுதிப்போட்டிக்குத் தகுதிப்பெற்றுள்ளது. மேலும் தொடர்ந்து 4 ஆவது முறையாக இறுதிப்போட்டிக்குத் தகுதிப்பெற்ற இந்திய அணியைப் பார்த்து முன்னணி வீரர்கள் பலரும் வியப்படையும் அளவிற்கு பல சம்பவங்கள் நடைபெற்றிருக்கின்றன.

19 வயதுடையோருக்கான இந்தியக் கிரிக்கெட் அணி நேற்று ஆஸ்திரேலியாவிற்கு எதிரான அரையிறுதிப் போட்டியை எதிர்கொண்டது. முன்னதாக மிகவும் திறமை வாய்ந்த ஆஸ்திரேலிய அணியை இவர்கள் எப்படி எதிர்கொள்வார்கள் என விமர்சிக்கப்பட்டது. ஆனால் இந்தப் போட்டியை இந்திய அணியின் கேப்டன் யாஷ் துல் மிக நேர்த்தியாக வழிநடத்தி வெற்றிப்பெற வைத்துள்ளார்.

மேலும் அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த யாஷ் துல் 110 ரன்களை அடித்து அண்டர் 19 போட்டியில் சதம் அடித்த 3 ஆவது இந்திய வீரர் என்ற பெருமையையும் தட்டிச்சென்றுள்ளார். இதற்கு முன்பு கடந்த 2008இல் கோலியும் 2012இல் உன்முக்த் சந்தும் சதத்தை விளாசியிருந்தனர்.

நேற்றைய போட்டியில் முதலில் களம் இறங்கிய இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 290 ரன்களை குவித்திருந்தது. இதனால் அண்டர் 19 கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை யாரும் 200 ரன்களை எடுத்ததேயில்லை என்ற வரலாற்று சாதனையையும இந்திய அணி முறியடித்துவிட்டது. மேலும் 194 ரன்களுக்கு ஆஸ்திரேலிய அணியை ஆல்அவுட்டாக்கி இந்திய தற்போது இறுதிப்போட்டிக்குத் தகுதிப் பெற்றுள்ளது.

இதனால் இங்கிலாந்திற்கு எதிரான இறுதிப்போட்டியில் இந்திய அணி திறமையாக விளையாடி வெற்றிப்பெற்றுவிட வேண்டும் என ரசிகர்கள் அதிக ஆர்வத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். காரணம் இந்திய அணிவீரர்கள் நேற்றைய போட்டியில் விக்கெட்டே விழாமல் மிகத் திறமையாக செயல்பட்டனர். கூடவே அணி வீழ்ச்சியில் இருந்தபோது கேப்டன் யாஷ் துல் 110 ரன்களையும் ரஷீத் 94 ரன்களையும் கூட்டணி வைத்து விளாசியிருந்தனர். இவர்களது ஆட்டத்தைப் பார்த்த இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் நெகிழ்ந்து பாராட்டியுள்ளார்.

அதேபோல இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வான் இந்திய இளம் வீரர்கள் மிகத் திறமையாக விளையாடியுள்ளனர். மேலும் இந்தியாவின் எதிர்காலம் மிகச் சிறப்பாக அமையும் எனவும் பாராட்டியுள்ளார். பேட்டிங்கைப் போலவே இந்திய இளம் வீரர்கள் வேகப்பந்து வீச்சிலும் பட்டையைக் கிளப்பி வருவது இந்திய ரசிகர்கள் மத்தியில் பெரும் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. 

More News

'டான்' படத்தின் அடுத்த சிங்கிள் பாடல்: சிவகார்த்திகேயன், ப்ரியங்கா மோகன் அசத்தல்!

சிவகார்த்திகேயன் நடித்த 'டான்' திரைப்படம் வரும் மார்ச் 25ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்

சந்தேகத்தால ஒருத்தன் வாழ்க்கையை அழிச்சிட்டா, திரும்ப அடிப்பான்னு பயம் வரணும்: 'எஃப்.ஐ.ஆர்' டிரைலர்

சந்தேகத்தால் ஒருத்தனை தீவிரவாதி என்று முடிவு பண்ணி அவனோட வாழ்க்கையை அழித்தால் அவர்களில் எவனாவது ஒருவன் திரும்ப அடிப்பான் என்ற பயம் வரணும் என்ற வசனத்துடன்

பிக்பாஸ் அல்டிமேட்; முதல் வாரத்தில் யார் யாருக்கு எத்தனை மதிப்பெண்கள்?

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி கடந்த சில நாட்களுக்கு முன்னர் தொடங்கிய நிலையில் இந்த நிகழ்ச்சிகளில் சுரேஷ் சக்கரவர்த்தி, அபிநய், நிரூப், வனிதா விஜயகுமார், பாலாஜி முருகதாஸ், ஜூலி, ஸ்ருதி, சுஜா

ஓடிடி தளத்தில் வெளியாகும் விமல் நடித்த விலங்கு: ரிலீஸ் தேதி அறிவிப்பு

ஜீ5 ஓடிடி தளத்தில் ஏற்கனவே பல பொழுதுபோக்கான, தரமான திரைப்படங்கள் வெளியான நிலையில் அடுத்ததாக ரசிகர்களுக்காக பிரத்யேகமாக, இயக்குனர்  பிரசாந்த் பாண்டியராஜ்

சென்னையில் ரூ.10க்கு சாப்பாடு: சத்தமின்றி கார்த்தி ரசிகர்கள் நடத்தி வரும் உணவகம்!

சென்னையில் சத்தமில்லாமல் கார்த்தியின் ரசிகர்கள் பத்து ரூபாய்க்கு சாப்பாடு அளித்துவரும் தகவல் பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.