சென்னை காவல் நிலையத்தில் இந்தியாவின் முதல் திருநங்கை எஸ்.ஐ
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்தியாவின் முதல் திருநங்கை எஸ்.ஐ ஆக சென்னை சூளைமேடு காவல் நிலையத்தில் பிரித்திகா யாஷினி இன்று பொறுப்பேற்று கொண்டார். அவருக்கு காவல்துறை அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்
சேலம் மாவட்டத்தை சேர்ந்த யாஷினி எஸ்.ஐ பதவிக்கு விண்ணப்பித்த போது அவர் திருநங்கை என்பதால் அவருடைய விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. இதனை எதிர்த்து யாஷினி தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட் யாஷினியை எழுத்து தேர்வு எழுத அனுமதிக்குமாறு உத்தரவிட்டது. இதனையடுத்து எழுத்துத்தேர்வு, உடல்தகுதி தேர்வு, நேர்முகத்தேர்வு ஆகியவற்றில் வெற்றி பெற்றார்.
பின்னர் சென்னை போலீஸ் அகாடமியில் பயிற்சி மேற்கொண்ட யாஷினி பயிற்சிக்கு பின்னர் இன்று சென்னை சூளைமேடு காவல் நிலையத்தில் சஸ்-இன்ஸ்பெக்டர் ஆக பொறுப்பேற்றுக்கொண்டார். பதவியேற்றவுடன் செய்தியாளர்களை சந்தித்த யாஷினி, 'குற்றம் செய்தவர் யாராக இருந்தாலும் விருப்பு வெறுப்பு இன்றி எனது பணியை செய்வேன்' என்று உறுதியளித்தார். இந்தியாவின் முதல் திருநங்கை எஸ்.ஐ-க்கு காவல்துறையினர்களும் பொதுமக்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments