வியக்க வைக்கும் கண்டுபிடிப்புகள்,ப்ளூடூத் மூலமாக கட்டுப்படுத்தப்படும் செயற்கை நுண்ணறிவு ஆசிரியை.
Send us your feedback to audioarticles@vaarta.com
தற்போதைய காலகட்டத்தில் எத்தனையோ கண்டுபிடிப்புகள்,புதுவித மாற்றங்கள்,ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.சமீப காலமாக நிலவ கூடிய செயற்கை நுண்ணறிவு (AI )வளர்ந்து வரும் துறைகளில் முக்கியமான ஒன்று.அதிலும் கடந்த இரண்டு வருடமாக (AI)வளர்ச்சி தீவிரமாக உள்ளது.இன்னும் வர கூடிய காலத்தில் இதனுடைய வளர்ச்சி அதிகரிக்கும் என்பதே உண்மை.
இதை வகையான செயற்கை நுண்ணறிவில் மொத்தமாக ஏழு வகைகள் உள்ளன.ஆனால் அதன் திறனை வைத்து இதனை மூன்று வகையாக பிரிக்கலாம்.மேலும் செயல்பாடுகளை வைத்து நான்கு வகையாக பிரிக்கலாம்.ஒரு மனிதனின் அறிவு திறனை அப்படியே ஒரு கணினிக்கு கொடுத்தால் என்ன ஆகும் ?அதன் வெளிப்பாடுகள் என்னவாக இருக்கும் என்பதன் தேடலே இந்த செயற்கை நுண்ணறிவு.
ஒரு மனிதனுக்கும் இயந்திரத்திற்கும் இடையே உள்ள வேறுபாடு படைப்பாக்க திறன் ஆகும்.மனிதனிடம் உள்ள அந்த படைப்பாக்க திறனை ஒரு இயந்திரத்திற்கு அளித்தால் அது என்ன செய்யும்?அதை சாத்தியப்படுத்துவதே செயற்கை நுண்ணறிவு என அழைக்கப்படுகிறது.
இந்த செயற்கை நுண்ணறிவுசிந்திப்பது,செயல்படுவது,திட்டமிடுவது,மனிதனின் எண்ணங்களை கற்று கொள்ளுதல் போன்ற அனைத்து திறன்களை உள்ளடக்கியது.இது துணைத் துறைகள்,குறிக்கோள்கள்,குறிப்பிட்ட கருவிகளின் பயன்பாட்டை மையமாக கொண்டுள்ளது.மனித மூளையின் வடிவங்களை படிப்பதன் மூலமும் அறிவாற்றல் செயல்முறையை பகுப்பாய்வு செய்வதன் மூலமும் AI நிறைவேற்றப்படுகிறது.
அந்த வகையில் கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் கடுவாயில் பகுதியில் உள்ள தொண்டு அறக்கட்டளை உயர்நிலை பள்ளியில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் இயங்கும் ரோபோ ஆசிரியை ஒன்று பணியில் உள்ளது.
இது தொடர்பாக மாணவர்களிடையே நல்ல வரவேற்பும் உள்ளது.இந்த ரோபோக்கு ஐரிஸ் என பெயரிடப்பட்டுள்ளது.ரோபோவின் கழுத்து பகுதியில் உள்ள மைக் மூலமாக மாணவர்கள் கேட்கும் கேள்விக்கு பதில் அளிக்கிறது.குரல் மூலமாக கேட்கும் கேள்விகள் (AI )தொழில்நுட்பம் மூலம் எழுத்துக்களாக மாற்றப்பட்டு அதற்கான விடைகள் அறியப்படுகின்றன.பின்னர் எழுத்து வடிவிலான பதில் மீண்டும் குரல் வடிவில் மாற்றப்பட்டு ஐரிஸ் ஆசியையால் மாணவர்களுக்கு உரைக்கப்படுகிறது.ஆதித்யன்,முகமது முபாரக்,முகமது தியாஸ்,அபுஜித் மற்றும் ஆலியா போன்ற மாணவ குழுவினரே இதனை உருவாக்கியுள்ளனர்.எட்டு மற்றும் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் இந்த மாணவர்கள் தொழில்நுட்ப உதவியுடன் இந்த ஐரிஸ் ரோபோ ஆசிரியையை உருவாக்கி உள்ளனர்.
மின்சாரத்தால் சார்ஜ் செய்யப்படும் ups மூலம் ஐரிஸ் ரோபோ இயங்குகிறது.இதன் அசைவுகள் அனைத்தும் ப்ளூடூத் தொழில்நுட்பம் மூலம் கட்டுப்படுத்தப்படுகிறது.இந்த ஐரிஸ் ரோபோ ஒரு முன்னோட்டம் மட்டுமே இனி வரும் காலத்தில் இதில் சில மாற்றங்களோடு மேம்படுத்தப்போவதாகவும் அந்த கண்டுபிடிப்பு மாணவர்கள் கூறியுள்ளனர்.
என்னதான் செயற்கை நுண்ணறிவு மூலமாக சில தவறுகள் நடந்தாலும் ஐரிஸ் ஆசிரியை மற்றும் ரோபோ செய்தி வாசிப்பாளர் போன்ற நிறைய கண்டுபிடிப்புகள் மக்களிடையே நிறைய வரவேற்பை பெற்றுள்ளன.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Anvika Priya
Contact at support@indiaglitz.com