இந்தியாவின் கனவு நாயகன்… நினைவு தினம் இன்று!!!

 

இந்தியாவின் வல்லரசு கனவை இளைஞர்கள் மத்தியில் விதைத்த எழுச்சி நாயகன் டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் 5 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று. கனவு காணச் சொல்லி மாணவர்களின் அறிவுக் கண்ணைத் திறந்தவர். தேர்ந்த ஒரு பகுத்தறிவு வாதியாகத் திகழ்ந்தவர். உலகில் இருக்கும் அனைத்து தலைவர்களை விடவும் மிகுந்த பணிவுடையவர் என்ற பாராட்டப் பட்டவர். இவர் பிறந்தது 1931 அக்டோபர் 15 இல். பாம்பன் பகுதியில் உள்ள ராமேஷ்வரத்தின் ஒரு சிறு கிராமத்தில் இவர் பிறந்தார். தமிழ் வழி கல்வியை அங்குள்ள தொடக்கப் பள்ளியில் தொடங்கியிருக்கிறார். மேல்நிலை பள்ளிக்கு செல்லமுடியுமா என்ற சந்தேகத்துடனே அவருடைய பள்ளிப்பருவம் முடிந்து இருக்கிறது. பின்பு திருச்சி புனித ஜோசப் கல்லூரியில் இயற்பியல் பட்டத்தை பெற்றிருக்கிறார். தன்னுடைய பட்டச் சான்றிதழை 43 ஆண்டுகளுக்குப் பின்னர்தான் இவர் வாங்கியிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பின்பு சென்னை எம்ஐடியில் விண்வெளி தொழில் நுட்பத்தில் பட்டப்படிப்பை முடித்திருக்கிறார். டெல்லி பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்திருக்கிறார். அப்போது அவருடைய சம்பளம் ரூ.250. அங்கிருந்து 1969 ஆம் ஆண்டில் இஸ்ரோ நிறுவனத்திற்கு மாற்றப்பட்ட அவர் நாட்டின் முதலாவது உள்நாட்டு செயற்கைக்கோள் எஸ்எல்வி திட்டத்தின் பணியாற்றியிருக்கிறார். எஸ்எல்வி 3 செயற்கைக்கோளை இந்தியா வெற்றிக்கரமாக அனுப்பியதற்கு இவரின் பங்கு அளப்பரியது எனச் சொல்லப்படுகிறது.

அடுத்து ரோகிணி செயற்கைக்கோளை புவிச்சுற்றுகு அருகே இயக்கியத் திட்டத்திலும் இவருடைய பங்கு குறிப்பிடத்தக்கதாக இருந்தது. அடுத்தடுத்து 5 ஏவுகணைகளைத் தயாரிக்கும் திட்டத்திலும் இவர் முக்கிய நபராக அமர்த்தப்படுகிறார். அதில் திரிசூல், பிருத்வி, ஆகாஷ், அக்னி போன்ற ஏவுகணைகளைத் தயாரிப்பதற்கும் சோதனை செய்து பார்ப்பதற்கும் அப்துல் கலாம் பேருதவியாக இருந்திருக்கிறார். முதல் முறையாக இந்திய விமானிகள் தயாரித்த ராக்கெட் சோதனையும் இவருடைய உழைப்பினால் நடந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

1963-1983 வரை இஸ்ரோ விஞ்ஞானியாக இருந்து இந்தியாவின் பல அறிவியல் ஆக்கத்திறக்கு உழைத்திருக்கிறார். 1999 இல் இந்தியாவின் பொக்ரான் அணுகுண்டு சோதனையை வெற்றிகரமாக நடத்திக் காட்டிய அப்துல் கலாம் இந்திய மக்களின் மனதில் நீங்க இடத்தை பெற்றார். இவருடைய உழைப்பை பாராட்டி இந்திய அரசு பத்ம பூஷன் விருதை வழங்கி கௌரவித்தது. இப்படி பல திட்டங்களில் பணியாற்றிய அவருக்கு இந்தியாவின் உயரிய விருதான பாரத் ரத்னா விருதையும் 1997 இல் வழங்கி இந்திய அரசு கௌரவித்தது.

விஞ்ஞானியாக இருந்தாலும் எப்பொழுதும் மாணவர்களின் உந்து சக்தியாக இருக்கவே அவர் விரும்பியருக்கிறார். அண்ணா பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் மற்றும் மைசூர் பல்கலைக் கழகத்தின் வருகை தரு பேராசிரியர் பணியை அவர் ஒருபோதும் தட்டிக்கழித்ததே இல்லை. பிரதமரின் அறிவியல் ஆலோசகராக பணியாற்றிய இவருக்கு 2002 இல் இந்தியாவின் ஜனாதிபதி பதவி தேடி வந்தது என்பதும் ஒரு முக்கிய புள்ளி. அடுத்தடுத்து அரசியலில் மட்டுமே கவனம் செலுத்துவார் என்று நினைத்த பலருக்கும் அவர் கொடுத்தது பெரும் அதிர்ச்சி. அந்த ஆண்டுகளில் அதாவது வெறும் 10 ஆண்டுகளில் அவர் 1 கோடி மாணவர்களை நேரில் சென்று சந்தித்து இருக்கிறாராம்.

அவர் கலந்து கொள்ளும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் கேள்வி பதில் என்பது கட்டாயம் இடம் பெறும். மாணவர்களின் கேள்விக்கு விஞ்ஞானி அளிக்கும் பதில் எளிய பகுத்தறிவாகத்தான் இருக்கும் என்பதும் இன்னொரு விந்தை. 2002 ஜனவரி 11 இல் குடியரசு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் பதவியில் இருக்கும்போதே இறந்திருக்கிறார். அதுவும் உரை நிகழ்த்திக் கொண்டிருக்கும் போதே. தன்னுடைய வாழ்நாள் முழுவதும் இளைஞர்களின் எழுச்சிக்காக, அறிவுக்காக மட்டுமே சிந்தித்து கொண்டு இருந்தவர் 2015 ஜுலை 27 ஷில்லாங்கில் உள்ள மேலாண்மையியல் கல்லூரியில் உரையாற்றும்போது மேடையிலேயே உயிரிழந்தார்.

எப்போதும் மாணவர்களுடன் நெருக்கம் காட்டி இந்தியாவின் வளர்ச்சியைக் குறித்து கனவு கண்டவர் அப்துல் கலாம். இளைஞர்களின் முயற்சிக்கு எல்லை எதுவும் இல்லை என்று தொடர்ந்து வலியுறுத்திக் கூறியவர். திருக்குறள் மீது அடங்காத பற்று கொண்டவர். திருக்குறளுக்கு உரையும் எழுதியிருக்கிறார். இசையின் மீது காதல் கொண்டவர். எப்போதும் வீணையை தன்னுடனே வைத்திருக்கும் இயல்பைக் கொண்டவர். மருத்துவத் துறைக்கும் இவர் ஆற்றிய பங்கு அளப்பரியது. போலியோவால் தாக்கப்பட்ட குழந்தைகளுக்காக இவர் தயாரித்த ஊன்றுகோல், இதயநோய் பாதிப்பால் நலிந்தவருக்காக தயாரித்த ஊன்றுகோல் போன்றவை இன்றைக்கும் இவருடைய பெயராலேயே அழைக்கப்படுகிறது.

சமானியர்களையும் இந்தியா 2020 கனவை காணவைத்தவர். அக்னி சிறகுகள் என்ற தன்னுடைய அனுபவத்தையே மாணவர்களுக்கு வழிகாட்டியாகக் கொடுத்தவர். எதிர்கால இந்தியா இளைஞர்களின் கையில் என்ற வசனத்துக்கு சொந்தக்காரர். இப்படி இவருடைய உற்சாகத்தையும் இந்த தலைமுறை மட்டுமல்ல இந்தியாவில் பிறக்கிற அனைத்துத் தலைமுறைகளும் கொண்டாடும் அளவிக்கு தாக்கத்தை ஏற்படுத்தியர் திரு.அப்துல் கலாம்.

More News

ஏழைச் சிறுவனின் கல்விக்கு கைக்கொடுக்கும் இளம் காவல் அதிகாரி!!! நெகிழ்ச்சி சம்பவம்!!!

மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் பகுதியில் உள்ள பலாசியா காவல் நிலையத்தில் பணியாற்றும் இளம் காவல் அதிகாரி வினோத் தீக்ஷித்

அமிதாப் குடும்பத்தின் இருவர் டிஸ்சார்ஜ்: ரசிகர்கள் வாழ்த்து

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் மற்றும் அவருடைய மகன் அபிஷேக் பச்சன் ஆகிய இருவரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மும்பையில் உள்ள நானாவதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்

டிக்டாக் தடையோடு கணக்கு முடியல… பப்ஜி உள்ளிட்ட பெரிய லிஸ்டே இருக்கு… பரபரப்பு தகவல்!!!

கடந்த சில மாதங்களாக இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே இருந்து வரும் எல்லைப் பிரச்சனையில் இன்னும் தீர்க்கமான முடிவு எதுவும் எட்டப்படவில்லை

கொரோனா பரவல் தடுப்பு: அரிசியோடு சேர்த்து மாஸ்க் வழங்கும் தமிழக அரசு!!!

கொரோனா பரவலைத் தடுக்க தமிழக அரசு சார்பில் அனைத்துக் குடிமக்களுக்கும் இலவசமாக மாஸ்க் வழங்கப்படும் என சில மாதங்களுக்கு முன்பு முதல்வர் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.

அடுத்த அமெரிக்க அதிபர் இவர்தான்… கருத்துக் கணிப்பில் வெளியான சுவாரசியத் தகவல்!!!

அமெரிக்காவில் கொரோனா பெருந்தொற்றுக்கு நடுவிலும் அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரம் சூடு பிடித்திருக்கிறது.