வந்தாச்சு... இந்தியாவின் கொரோனா தடுப்பூசி: மனிதர்களுக்கு சோதனை செய்து பார்க்க ICMR ஒப்புதல்!!!

  • IndiaGlitz, [Tuesday,June 30 2020]

 

தற்போது, உலக மக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி குறித்த செய்திகளைத்தான் எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இதுவரை அமெரிக்கா, ஜெர்மனி, பிரிட்டன், இத்தாலி, சீனா போன்ற நாடுகள் கொரோனா தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி அதன் இறுதி முடிவிற்காகக் காத்து கொண்டிருக்கின்றன. மேலும், உலகம் முழுவதும் 17 கொரோனா தடுப்பூசிகள் இறுதிகட்ட சோதனையில் இருப்பதாக உலகச் சுகாதார நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. இந்நிலையில் இந்தியாவின் முதல் கொரோனா தடுப்பூசி தயாரிக்கப் பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி பற்றிய ஆய்வுகளை பாரத் பயோடெக் நிறுவனம் மற்றும் பூனேவில் உள்ள தேசிய வைரலாஜி நிறுவனமும் இணைந்து மேற்கொண்டு வந்தது. தற்போது இந்நிறுவனங்களின் தயாரிப்பாக இந்தியாவின் முதல் கொரோனா தடுப்பூசி, விலங்குகளின் மீது சோதனை செய்து பார்க்கப்பட்டு அடுத்தக் கட்ட சோதனைக்கு தயாராகி இருக்கிறது. விலங்குகளின் மீது சோதனை செய்து பார்க்கும்போது நல்ல முன்னேற்றத்தைக் கண்டதாகவும் விஞ்ஞானிகள் கருத்துத் தெரிவித்து உள்ளனர். தற்போது இந்தியாவின் முதல் கொரோனா தடுப்பூசி COVIAXIN என்ற பெயரிட்டு அழைக்கப் படுகிறது. இந்த தடுப்பூசிக்கு இந்தியாவின் மருந்து கட்டுப்பாட்டு நிறுவனமும் ஒப்புதல் வழங்கியிருக்கிறது.

ஏற்கனவே விலங்குகளுக்கு செலுத்தப்பட்டு சோதனை முடிவு எட்டப் பட்டதால் தற்போது மனிதர்களின் மீதான சோதனைக்கு ICMR ஒப்புதல் வழங்கியிருக்கிறது. கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பில் இந்திய விஞ்ஞானிகள் குறிப்பிடத்தக்க பங்களிப்பை செய்திருக்கிறார்கள் என்று பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே கொரோனா சிகிச்சைக்கு மற்ற நாட்டு மருந்துகளை (Remdesivir) எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்த நிலையில் இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு நிறுவனம் தற்போது கொரோனா சிகிச்சைக்கும் அதிகாரப்பூர்வமான மருந்து பட்டியலை வெளியிட்டு இருக்கிறது.

மாற்றமடைந்த கொரோனாவின் மரபணு வரிசைகள் மற்றும் கொரோனாவின் புதிய வகை வைரஸ்களை இந்தியா விஞ்ஞானிகள் கண்டுபிடித்து ஏற்கனவே உலகச் சுகாதார நிறுவனத்திற்கு தகவல் தெரிவித்து இருந்தனர். இந்நிலையில் கொரோனாவின் தடுப்பூசி கண்டுபிடிப்பிலும் இந்தியா முன்னிலை வகித்து வருவதாக இந்திய விஞ்ஞானிகளுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

More News

தூத்துக்குடி டிஎஸ்பி, ஏடிஎஸ்பி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்: நீதிமன்றத்தின் அதிரடியால் பரபரப்பு

சாத்தான்குளம் தந்தை-மகன் மரணம் தொடர்பாக விசாரணை செய்த மாஜிஸ்திரேட் ஒருவரை ஒருமையில் மரியாதைக்குரிய வகையில் பேசியதாக  சாத்தான்குளம் ஏடிஎஸ்பி, டிஎஸ்பி மீது புகார் எழுந்துள்ளது.

அரசியல்வாதிகளிடம் பவ்யம், சாமானிய மக்களிடம் அராஜகம்: சாத்தன்குளம் குறித்து பிரபல நடிகரின் நீண்ட பதிவு

சாத்தான்குளம், தந்தை-மகன் லாக்கப் மரணம் குறித்து ஒருசில நடிகர்கள் தவிர கிட்டத்தட்ட அனைத்து கோலிவுட் திரையுலகினர்களும் தங்களுடைய ஆவேசமான கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்தனர்

டிக்டாக், ஹலோ உள்பட 59 செயலிகளுக்கு தடை: இந்தியா அதிரடி உத்தரவு

டிக் டாக், ஹலோ ஆப் உள்பட சீன நிறுவனங்களின் 59 மொபைல் செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

தமிழகத்தில் ஜூலை 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு! சென்னையில் தொடர்கிறது முழு ஊரடங்கு!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்டிருந்த ஐந்தாம் கட்ட ஊரடங்கு நாளையுடன் முடிவடைகிறது. இதனையடுத்து இன்று காலை மருத்துவ நிபுணர்களுடன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

தமிழகம் முழுவதும் 703 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள்: தமிழக அரசு அறிவிப்பு

கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்டிருந்த ஐந்தாம் கட்ட ஊரடங்கு நாளை மறுநாளுடன் முடிவடைவதை அடுத்து மேலும் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? என்ற அச்சம் அனைவர் மனதிலும் இருந்தது.