கொரோனா தடுப்பூசி ஆய்வில் தீவிரம் காட்டும் இந்தியாவின் 30 விஞ்ஞானக் குழுக்கள்!!!
- IndiaGlitz, [Thursday,May 28 2020]
இந்தியாவில் சுமார் 30 குழுக்களைச் சார்ந்த விஞ்ஞானிகள் கொரோனா தடுப்பூசி ஆய்வில் ஈடுபட்டுள்ளதாக முதன்மை அறிவியல் ஆலோசகர் விஜயராகவன் தெரிவித்து உள்ளார். தற்போது நடைபெற்று வரும் ஆய்வில் கிட்டத்தட்ட 20 க்கும் மேற்பட்ட கொரோனா தடுப்பூசி ஆய்வுகள் இறுதிகட்ட நிலையில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தக் குழுக்களில் அரசு விஞ்ஞானிகள் மற்றும் பல்வேறு தனியார் தன்னார்வலர்களுக்கும் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
கொரோனா போன்ற புதிய நோய்த்தொற்றுக்கு தடுப்பூசி என்பது மிகவும் சவால விஷயம். இதற்கு முழுமையான தடுப்பூசியைக் கண்டுபிடிக்க கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் கூட எடுக்கலாம். ஆனால் இந்த ஆண்டிற்குள் தடுப்பூசியை கண்டுபிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் உலகம் முழுவதும் பல விஞ்ஞானிகள் முயற்சித்து வருகின்றனர். தற்போது இந்தியாவில் மேற்கொள்ளப் பட்டு வரும் தடுப்பூசி ஆய்வுகளில் நல்ல முன்னேற்றம் இருக்கிறது. அவை எதிர்காலத்தில் கைக்கொடுக்கலாம் எனவும் அவர் நம்பிக்கை அளித்துள்ளார். இந்நிலையில் இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 159,054 ஆக அதிகரித்து இருக்கிறது. உயிரிழப்புகள் 4,541 ஆகவும் பதிவாகி இருக்கிறது.