இளம் வயதிலேயே ஐசிசி எலைட் நடுவர் குழுவில் இடம் பிடித்த இந்தியர்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஐசிசி எலைட் நடுவர் குழுவில் இணைந்து பணியாற்ற இந்தியாவை சேர்ந்த நிதின் மேனன் தேர்ந்தெடுக்கப் பட்டு இருக்கிறார். அவருக்கு வயது 36 என்பதும் குறிப்பிடத்தக்கது . மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இந்த இளைஞரின் தந்தையான நரேந்திர மேனனும் நடுவராக பல ஆண்டுகள் வேலை பார்த்தவர். நிதின் மேனன் தற்போது ஐசிசி எலைட் நடுவர் குழுவில் பணியாற்றத் தேர்ந்தெடுக்கப் பட்டு இருகிறார் என்பது இந்தியர்கள் மத்தியில் பெருமை பாராட்டும் விஷயமாகப் பார்க்கப்படுகிறது.
நடுவராகப் பொறுப்பு வகிப்பதில் இந்தியாவை சேர்ந்தவர்கள் பெரும்பாலும் பின்னடைவுடன் காணப்படுகின்றனர் எனத் தொடர்ந்து விமர்ச்சிக்கப் பட்டு வருகிறது. அத்தகைய நேரங்களிலும் நிதின் மேனன் மீதான பார்வை சர்வதேச அளவில் ஏற்றத்துடனே காணப்பட்டது. அதைத் தொடர்ந்து ஐசிசி எலைட் பிரிவில் நடுவராக பொறுப்பு வகிக்க இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. முன்னாள் கேப்டன் வெங்கட் ராகவன் மற்றும் சுந்தரம் ரவி ஆகியோர்களைத் தொடர்ந்து இந்தியாவை சேர்ந்த நிதின் மேனன் தற்போது சர்வதேச போட்டிகளில் நடுவராக பதவி வகிக்கப் போகிறார்.
அடுத்த ஆண்டு நடைபெற போகும் ஆஷ்ஸ் தொடரிவில் இவர் நடுவராக பணியாற்றப் போகிறார் எனவும் எதிர்ப்பார்க்கப் படுகிறது. மேலும் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையே நடைபெற போகும் 5 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலும் இவர் நடுவராகப் பணியாற்ற இருக்கிறார். மத்தியப் பிரதேச மாநிலத்தை இவர் மத்தியப்பிரதேச A அணிக்காக 13 ஆண்டுகள் பேட்ஸ்மேனாக விளையாடி இருக்கிறார். பின்பு 2015 முதல் ரஞ்சி டிராபி போட்டிகளில் நடுவராகப் பணியாற்றத் தொடங்கி விட்டார். 2017 இல் இந்தியாவிற்கும் இங்கிலாந்துக்கும் இடையே நடைபெற்ற போட்டிகளில் சர்வதேச நடுவராகவும் பணியாற்றினார். இதுவரை 3 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 24 ஒருநாள் போட்டிகளில் நடுவராகப் பணியாற்றி இருக்கிறார். மேலும் 16 டி-20 போட்டிகளில் பணியாற்றி இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments