கொரோனா நோய்க்கான எதிர்ப்பு ஆற்றல் இந்தியர்களுக்கு இயல்பிலேயே இருக்கிறது!!! மூத்த விஞ்ஞானி தகவல்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கொசுத் தடுப்பு மையத்தின் மூத்த விஞ்ஞானியும் சுகாதாரத்துறை ஆலோசகருமான மாரியப்பன் கொரோனா வைரஸை எதிர்ப்பதற்கான நோய் எதிர்ப்பு ஆற்றல் இந்திய மக்களின் உடலில் இயல்பாகவே காணப்படுகிறது எனத் தெரிவித்துள்ளார். மேலும், கொரோனா வைரஸ் ஐரோப்பா மற்றும் அமெரிக்கக் கண்டங்களில் ஏற்படுத்தியத் தாக்கத்தைப் போன்று இந்தியாவில் தாக்கத்தை ஏற்படுத்தாதற்கு பல முக்கியக் காரணங்கள் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவில் நிலவும் தட்பவெட்ப நிலை மற்றும் இந்திய மக்களின் ஜீன் அமைப்பும் கொரோனா வைரஸ் பரவலுக்கு தடுப்புக் காரணியாக விளங்குகிறது. இந்தியாவில் உள்ள அனைவருக்கும் குழந்தை பருவத்திலேயே தடுப்பூசி போடும் மருத்துவக் கட்டமைப்பு இங்கு வலுவாக இருக்கிறது. எனவே நோய் எதிர்ப்பு ஆற்றல் இந்திய மக்களுக்கு அதிகம் எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் கொரோனா வைரஸை பற்றி குறிப்பிட்டுள்ள மாரியப்பன், இந்திய விஞ்ஞானிகள் 1990 ஆம் ஆண்டே கொரோனா வைரஸ் வவ்வால்கள் மூலமாக மனிதர்களுக்கு பரவுகிறது என்பதை கட்டுரையாக பதிவு செய்திருப்பதாகவும் தெரிவித்து இருக்கிறார்.
நேஷனல் National Institute of Virology நிறுவனத்தின் விஞ்ஞானிகள் ஜி. வர்கீஸ், கல்யாண் பானர்ஜி ஆகியோர் கொரோனா வைரஸ் பற்றிய தகவல்களை 1990 ஆண்டுகளிலேயே வெளியிட்டுள்ளனர் என்றும், வவ்வால் மூலமாக 1985 இல் அமெரிக்காவில் ஒருவருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டது என்றும் குறிப்பிட்டுள்ளார். எனவே கொரோனா என்பது புதிதல்ல, இந்தியாவில் பல கொள்ளை நோய்களை விஞ்ஞானிகள் எளிதாகக் கட்டுப்படுத்தியுள்ளனர். அரசின் உத்தரவுகளுக்கு மக்கள் முறையான ஒத்துழைப்பை வழங்கும் பட்சத்தில் இந்தத் தொற்றில் இருந்து வெளிவரலாம் எனவும் நம்பிக்கை அளித்து இருக்கிறார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout