மேலும் ஒன்றரை மாதங்களுக்கு ரயில் சேவை ரத்து: பொதுமக்கள் அதிர்ச்சி

  • IndiaGlitz, [Thursday,May 14 2020]

மூன்றாம் கட்ட ஊரடங்கு வரும் ஞாயிறுடன் முடிவடைய உள்ள நிலையில் மூன்றாம் கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்படும் என பிரதமர் மோடி ஏற்கனவே அறிவித்திருந்தார். இந்த நிலையில் தற்போது ரயில்சேவைகள் மேலும் ஒன்றரை மாதங்களுக்கு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 24ஆம் தேதி முதல்கட்ட ஊரடங்கும், ஏப்ரல் 15ஆம் தேதி முதல் இரண்டாம் கட்ட ஊரடங்கும் அமலில் இருந்து வரும் நிலையில் சமீபத்தில் ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து சிறப்பு ரயில்கள், வெளிநாட்டில் இருக்கும் இந்தியர்கள் திரும்புவதற்காக சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டன.

இந்த நிலையில் 3ஆம் கட்ட ஊரடங்கு முடிந்தவுடன் பஸ், ரெயில் போக்குவரத்து சில நிபந்தனைகளுடன் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென தற்போது நாடு முழுவதும் ஜூன் 30 வரை அனைத்து பயணிகள் ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி ஜூன் 30 வரை பதிவு செய்யப்பட்ட முன்பதிவுகள் அனைத்து டிக்கெட்டுகளும் ரத்து செய்யப்படும் என்றும் இந்தியன் ரயில்வே அறிவித்துள்ளது. ஜூன் 30 வரை ரயில்சேவை ரத்து என்பதால் ஜூன் 30தேதி வரை 3ஆம் கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது