ஊரடங்கால் பண நெருக்கடி, கடன் தொல்லை: ஒரே இரவில் கோடீஸ்வரராக மாறிய இளைஞர்!
- IndiaGlitz, [Thursday,December 24 2020]
கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக கடன் தொல்லை மற்றும் பண நெருக்கடியில் இருந்த கேரளாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு லாட்டரியில் ஏழு கோடி ரூபாய் பரிசு கிடைத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
கேரளாவை சேர்ந்த சஞ்சீவன் என்ற 30 வயது இளைஞர் மனைவியுடன் துபாயில் வசித்து வருகிறார். கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக துபாயில் அவருக்கு வேலை திடீரென போய்விட்டது. மனைவியின் வருமானத்தில் மட்டுமே அவர் சமாளித்துக் கொண்டு இருந்த நிலையில் அவர் கடன் தொல்லை மற்றும் பண நெருக்கடிக்கு ஆளானார்
இந்த நிலையில் கடந்த நவம்பர் 22 ஆம் தேதி சஞ்சீவன் வாங்கிய துபாய் லாட்டரி ஒன்றின் மூலம் அவருக்கு இந்திய மதிப்பில் ரூபாய் 7 கோடி பரிசு விழுந்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இதனை அடுத்து தன்னுடைய கடன்கள் அனைத்தையும் அடைத்துவிட்டு மீதி பணத்தை உரிய முறையில் முதலீடு செய்வேன் என்று அவர் கூறியுள்ளார்
துபாயில் தனக்கு வேலை கிடைக்காமல் மனைவியின் வருமானத்தில் மட்டுமே வாழ்ந்து கொண்டிருந்த தனக்கு இவ்வளவு பெரிய பரிசு தொகை கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை என்று அவர் கூறியுள்ளார் கடன் தொல்லை மற்றும் பண நெருக்கடியால் சிக்கித் தவித்த இந்திய இளைஞருக்கு துபாய் லாட்டரி மூலம் 7 கோடி பரிசு கிடைத்துள்ளது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது