பிணத்தை வைத்துக்கொண்டு 45 நிமிடங்களாக காரில் சுற்றிய இந்திய இளைஞர் – வழக்கு விசாரணை
Send us your feedback to audioarticles@vaarta.com
ஐக்கிய அரபு நாட்டில் கடந்த ஜுலை மாதத்தில் 27 வயதான இந்தியர் ஒருவர் தன் காதலியைக் கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அச்சம்பவத்தின் போது, கொலை செய்து விட்டு செய்வதறியாமல் தவித்த அந்த இளைஞர், பிணத்தை தன் கார் முன் இருக்கையில் வைத்துக் கொண்டு நகர் முழுவதும் 45 நிமிடங்களாகச் சுற்றி இருக்கிறார். நடுவில் ஒரு உணவகத்திற்கு சென்று உணவு மற்றும் தண்ணீர் பாட்டில்களையும் வாங்கியுள்ளார் என்பதும் குறிப்பிடத் தக்கது.
ஐக்கிய அரபு நாட்டில் வேலை பார்த்து வந்த இந்திய இளைஞர், இந்திய பெண் ஒருவரை நடந்த ஐந்து வருடங்களாகக் காதலித்து வந்தார். இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில் அந்தப் பெண் மற்ற ஆண்களுடன் பழகுவதாக இவர் சந்தேகம் அடைந்து அவரைக் கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் தொடர்ந்து சண்டை ஏற்பட்டுள்ளது. கடந்த ஜுலை மாதத்தில் கடும் கோபத்திற்கு ஆளான இளைஞர் தனது காதலியின் கழுத்தை கத்தியால் அறுத்தே கொலை செய்து இருக்கிறார். கொலை செய்து விட்டு என்ன செய்வது என்று புரியாமல் பிணத்தை காரில் வைத்துக் கொண்டு சுற்றியிருக்கிறார்.
கடைசியில், கார் நிறுத்தும் ஸ்டேஸனில் காரை நிறுத்தி விட்டு இரத்தம் படிந்த கையுடன் தீராவில் உள்ள அல் முரகாபாத் காவல் நிலையத்தில் சரணடைந்து இருக்கிறார். அவரது காரின் பின் இருக்கையில் ரத்தம் படிந்த கத்தியும் கண்டெடுக்கப் பட்டது.
இது குறித்து. கடந்த ஞாயிற்றுக் கிழமை அன்று துபாய் நீதிமன்றம் விசாரணை மேற்கொண்டது. இதில் 27 வயதான இந்திய இளைஞர் குற்றம் சாட்டப் பட்டார். விசாரணையின் போது அரசு தரப்பு கொலை செய்த இந்திய இளைஞருக்கு மரண தண்டனை விதிக்குமாறு கேட்டுக் கொண்டு இருக்கிறது என்பதும் குறிப்பிடத் தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout