பணமில்லாமல் லிப்ட் கேட்டே உலகை சுற்றிவரும் இளைஞர்... சுவாரசியச் சம்பவம்!

  • IndiaGlitz, [Saturday,November 27 2021]

ஊர் சுற்றிப்பார்க்க வேண்டும் என்றால் நாம் வார இறுதி நாட்களில் எங்காவது செல்வதை வழக்கமாக வைத்திருப்போம். ஆனால் பீகாரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், சாலையில் வருவோர் போவோரிடம் லிப்ட் கேட்டே கடந்த 4 வருடங்களில் 40 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பயணம் செய்திருப்பது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

பீகார் மாநிலத்தில் கோட்டா எனும் சிறிய ஊரில் அதுவும் பள்ளி ஆசிரியருக்கு மகனாகப் பிறந்த ஷுபம் யாதவ் எல்லோரையும் போல பயிற்சி வகுப்புகளுக்குச் செல்வதற்காக காத்திருந்தார். திடீரென தனது 16 ஆவது வயதில் பணமில்லாமல் எப்படி ஊர் சுற்றுவது என்ற வீடியோவை பார்த்திருக்கிறார். இதை தனது Youtube சேனலுக்காக பரிசோதித்துப் பார்க்கலாம் என்று நினைத்திருக்கிறார். எனவே முதன் முதலில் பீகாரில் இருந்து ஜெய்சால்மாருக்கு கிட்டத்தட்ட 675 கிலோ மீட்டர் லிப்ட் கேட்டே பயணம் செய்திருக்கிறார்.

இப்படி துவங்கிய பயணத்தை ஒரு கட்டத்தில் நிறுத்த முடியாமல் போய் இருக்கிறது. எனவே உலகம் முழுவதும் பணமில்லாமல் நடந்தே அதுவும் கால்களால் கடந்து விடுவது என முடிவெடுத்திருக்கிறார். இதற்காக விசா வாங்குவது, உள்ளூர் மொழிகளை கூகுளில் மொழிப்பெயர்த்து பேசுவது எனத் தனி பாணியை பின்பற்றும் இவர் ஒருபோதும் செலவு செய்து பயணிப்பது இல்லையாம்.

ஷுபம் சாலையில் வருவோர் போவோரிடம் லிப்ட் கேட்டே தனது பயணத்தை செய்துவருகிறார். இதற்காக பெயர் பலகைப் போன்று தனது கையில் ஒரு அட்டை வைத்து காத்திருக்கும் ஷுபமிற்கு சில சமயங்களில் கடினமாக அனுபவங்களும் நிகழ்ந்திருக்கின்றன. சாலையில் பார்க்கும் இவரை சிலர் ஏமாற்றுகிறார், ஏதோ பொருளை விற்கப்பார்க்கிறார் என்றெல்லாம் நினைத்தார்களாம். சில இடங்களில் போலீசிடம் மாட்டிக்கொண்டு முழித்த நிகழ்வுகளும் அரங்கேறி இருக்கிறதாம்.

ஆனால் தொடர்ந்து தினமும் இரவு நேரங்களில் தனது பயணத்தைத் தொடங்கும் ஷுபம் சாலையில் லிப்ட் தருபவர்களையே நம்பியிருக்கிறார். Hitchhiking என லிப்ட் கேட்டு பயணம் செய்வதற்கு உலகம் முழுவதும் ஒரு பெயரும் இருக்கிறதாம். ஷுபமைப் போலவே உலகம் முழுவதும் நூற்றுக்கணக்கான மக்கள் இப்படி பணத்தைச் செலவழிக்காமல் பயணம் செய்து வருகின்றனர். இதற்கான வழிமுறையைத்தான் ஷுபம் தனது யூடியூபில் பதிவு செய்து வருகிறார். மேலும் ஆங்காங்கே தனது நடக்கும் அனுபவங்களையும் அதில் பதிவு செய்துகிறார். இதையடுத்து 1.69 மில்லியன் ஃபாலோயர்களையும் அவர் பெற்றிருக்கிறார்.

வித்தியாசமான இந்தப் பயணத்தில் பல துன்பங்களும் இன்பங்களும் சேர்ந்தே அவருக்கு கிடைத்திருக்கின்றன. கடந்த 2019 ஆம் ஆண்டு மங்கோலிய பாலைவனத்தில் மாட்டிக்கொண்டு தண்ணீர் இல்லாமல் தவித்து வந்திருக்கிறார் ஷுபம். அங்குள்ள நோமத் எனப்படும் பழங்குடியினர் இவரை காப்பாற்றியுள்ளனர். அதிலிருந்து தனது பெயரை நோமத் ஷுபம் யாதவ் என்று மாற்றிக்கொண்டதும் குறிப்பிடத்தக்கது.

இவருடைய பயணத்தில் தாய்லாந்து நாட்டில்தான் மிகவும் கஷ்டத்தை அனுபவித்தாராம். அதேபோல கஜகஜஸ்தான் நாட்டில் மேயரிடமே லிப்ட் பெற்று அங்குள்ள நாடாளுமன்ற கட்டிடத்தில் விருந்து சாப்பிட்டு இருக்கிறார். இப்படி சுகமான அனுபவங்கள் சில நேரங்களில் மட்டும்தான் கிடைத்திருக்கிறது. மற்ற நேரங்களில் காவல் நிலையம், பெட்ரோல் பங்க் போன்ற இடங்களில் தங்கிக்கொண்டு தனது பயணத்தைத் தொடர்ந்திருக்கிறார்.

இந்தியாவில் இருந்து பங்களாதேஷ், மியான்மர், மங்கோலியா, தென் ஆப்பிரிக்கா, கஜகஸ்தான், ரஷ்யா என்று சாலை வழிகளையே கடைப்பிடிக்கும் இவர் கூகுளில் மொழிப்பெயர்த்து மற்றவர்களிடம் கருத்துகளைப் பகிர்ந்து கொள்கிறார். இதிலும் சில நேரங்களில் தவறுகள் நடக்கத்தான் செய்கின்றன.

மேலும் பாதுகாப்பு குறித்து பேசும் ஷுபம் ஒரு ஆணாக இருப்பதினால் இத்தனை விஷயங்களையும் செய்திருக்க முடிந்தது. என்னையும் உளவாளியாக இருக்குமோ என்று ஆப்கானிஸ்தான் ராணுவம் கைது செய்த சம்பவமும் நிகழ்ந்தது என்று உற்சாகத்துடன் பதிவு செய்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. 20 வயதில் பணமே இல்லாமல் 40 நாடுகளுக்கு பயணம் செய்திருக்கும் ஷுபன் யாதவை பார்க்கும் பலரும் தங்களது ஆச்சர்யத்தை வெளிப்படுத்தி வருவதோடு சுதந்திரமான பயணங்களுக்கு இவரும் ஒரு முன்னோடியாக இருக்கிறார் எனக் கூறிவருகின்றனர்.

More News

ரயில்வே தண்டவாளத்தில் சடலமாக கிடந்த பிரபல பாடகியின் தந்தை… துயரச் சம்பவம்!

தெலுங்கு சினிமாவில் பிரபல பின்னணி பாடகியாக வலம்வருபவர் ஹரிணி ராவ். இவருடைய தந்தை A.K.ராவ் கடந்த

மணலுக்கு நடுவே முளைத்திருக்கும் பிரமிடு, கல்லறை… மீண்டும் வைரலாகும் ஆண்ட்ரியா பதிவு!

தமிழில் முன்னணி நடிகையாகவும் பின்னணி பாடகியாவும் இருந்துவருபவர் நடிகை ஆண்ட்ரியா ஜெர்மையா. இவர் தற்போது

சென்னை வெள்ளத்தில் படகில் சென்ற மன்சூர் அலிகான்: வைரல் வீடியோ

சென்னையில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது என்பதும் இதனால் படகில் தான் பொதுமக்கள் மீட்கப்பட்டு வருகின்றனர் என்பதும் தெரிந்ததே.

கடற்கரையில் நடை பழகும் நடிகை ஸ்ரோயாவின் க்யூட் பாப்பா… மாஸ் வீடியோ!

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் நடிகை ஸ்ரேயா சரண்.

சிம்புவின் 'மாநாடு' சாட்டிலைட், டிஜிட்டல் உரிமம் குறித்த தகவல்!

சிம்பு நடித்த 'மாநாடு' திரைப்படம் நேற்று முன்தினம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது என்பதும் முதல் நாளில் இந்த படம் வசூலில் பெரும் சாதனை செய்துள்ளது என்றும் செய்திகள் வெளியானது.