ஆன்மீக வகுப்பில் பள்ளியறை பாடம்: ஆஸ்திரேலியாவில் இந்திய சாமியார் கைது!
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/play-spl.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igplunmute.png)
Send us your feedback to audioarticles@vaarta.com
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-like.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-dislike.png)
ஆஸ்திரேலியாவுக்கு ஆன்மீக வகுப்பெடுக்க சென்ற இந்திய சாமியார் ஒருவர் பள்ளியறையில் வகுப்பெடுக்க முயற்சி செய்ததால் அந்நாட்டு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
உபி மாநிலத்தை சேர்ந்த 38 வயது சாமியார் ஆனந்த்கிரி. இவர் அவ்வப்போது வெளிநாடுகளுக்கு ஆன்மீக வகுப்பு, யோகா பயிற்சி அளிக்க செல்வதுண்டு. அந்த வகையில் சமீபத்தில் ஆஸ்திரேலியா சென்று அங்கு ஆன்மீக வகுப்பு எடுத்துள்ளார். அப்போது ஆன்மீகம் வகுப்புக்கு வந்த இளம்பெண் ஒருவரை பள்ளியறைக்கு அழைத்து சென்று அத்துமீறியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டு போலீஸ் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகார் மீது விசாரணை செய்த அந்நாட்டு போலீசார் ஆனந்த்கிரியை கைது செய்தனர்.
ஏற்கனவே கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இவர் ஆஸ்திரேலியாவுக்க்கு சென்றபோதும், ஆன்மீக வகுப்பில் ஒரு தென்னிந்திய பெண் உள்பட இரண்டு பெண்களிடம் அத்துமீறியுள்ளார். இந்த புகாரின் மீது நடவடிக்கை எடுப்பதற்கு முன் இவர் இந்தியாவுக்கு திரும்பிவிட்டதால் இவர் மீது நடவடிக்கை எடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் தற்போது ஆன்மீக வகுப்பை முடித்துவிட்டு இன்று இந்தியா திரும்பவிருந்த நிலையில் நேற்று கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments