கொரோனாவுக்கு பூஜை நடத்திய இந்தியப் பெண்கள்!!! எங்கே தெரியுமா???

  • IndiaGlitz, [Wednesday,June 10 2020]

 

கொரோனாவைக் கட்டுப்படுத்த பல வழிமுறைகளில் விஞ்ஞானிகள் முயற்சி செய்துவரும் நிலையில் அசாம் மாநிலத்தில் கொரோனா தேவிக்கு பூஜை நடத்தப்பட்டு இருப்பது அதிச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. உலகம் முழுவதும் 120 கொரோனா தடுப்பூசி ஆய்வுகள் நடத்தப்பட்டு வருவதாக உலகச் சுகாதார நிறுவனம் அறிவிப்வு வெளியிட்டு இருக்கிறது. இதில் 30 க்கும் மேற்பட்ட ஆய்வுகள் மிகவும் முக்கியமானது என்றும் ஜுன் மாதம் வரை 10 க்கும் மேற்பட்ட தடுப்பு மருந்துகள் மனிதர்களின்மீது சோதனை செய்யப்பட்டு இருக்கிறது என்றும் தகவல் கூறப்படுகிறது. இப்படி உலகமே கொரோனாவை விரட்ட பல்வேறு முயற்சிகளை செய்து வரும்போது அசாமின் பல்வேறு பகுதிகளில் கொரோனா தேவிக்கு பெண்கள் பூஜை நடத்தி இருக்கிறார்கள்.

உலகத்தையே கொரோனா கடும் அச்சுறுத்தலுக்கு ஆளாக்கி இருக்கும்போது அசாம் மாநிலத்தில் பிஸ்வந்த் பூர் மாவட்டத்தின் சில பகுதிகளில் அதை தெய்வமாக்கி இருக்கிறார். அந்தத் தெய்வத்திற்கு கொரோனா தேவி எனப் பெயரிட்டு அவள் மகிழ்ச்சி அடைந்தால் மட்டுமே கொரோனா வைரஸ் இந்த உலகத்தை விட்டு ஒழியும் என்ற ஆழ்ந்த நம்பிக்கையும் கொண்டிருக்கின்றனர். தமிழகத்தில் அம்மை என்ற நோய்த்தொற்று பெண் தெய்வமான அம்மனின் வடிவமாக நம்பப்படுகிறது. இந்த நம்பிக்கை உலகம் முழுவதும் வெவ்வேறு வடிவங்களில் இருக்கிற ஒன்று என்பதும் குறிப்பிடத்தக்கது. அப்படி ஒரு பெண் தெய்வம்தான் இந்த கொரோனா வைரஸ் என்று தற்போது பெண்கள் நம்பத் தொடங்கியிருக்கின்றனர்.

கடந்த சனிக்கிழமை அன்று பிஸ்வந்த் பூரில் நீர் நிலைகள், நதிக்கரை பகுதிகளில் ஒட்டு மொத்தமாக கூடிய பெண்கள் கைகளில் மஞ்சள் போன்ற பூஜை பொருட்களைக் கொண்டு பூஜை நடத்தி இருக்கின்றனர். “நாங்கள் கொரோனா மாவுக்கு பூஜை செய்கிறோம். பூஜை முடிந்ததும் ஒரு காற்று வீசி வைரஸ் அழிக்கும்” என்று அந்தப் பெண்கள் செய்தியாளர்களுக்கு பேட்டியும் கொடுத்திருக்கின்றனர். கொரோனாவை தெய்வமாக நம்பும் இந்த அதீத நம்பிக்கை பிஸ்வந்த் பூரில் மட்டுமல்லாது குவஹாத்தியின் சில பகுதிகளில் காணப்படுவதாக தகவல் கூறப்படுகிறது. இந்நிலையில் அம்மாநில சுகாதார அமைச்சகம் மக்களுக்கு சமூக விலகலைக் குறித்து விழிப்புணர்வு செய்யப்பட்டு இருக்கிறது எனவும் தெரிவித்துள்ளனர்.