அமெரிக்காவில் இந்திய மாணவர் சுட்டுக்கொலை: என்ன நடந்தது?
Send us your feedback to audioarticles@vaarta.com
அமெரிக்க பல்கலைக்கழகத்தில் படித்து வந்த இந்திய மாணவர் ஒருவர் அங்கு நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் பரிதாபமாக பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
கர்நாடக மாநிலம் மைசூரை சேர்ந்த சுரேஷ்பட் என்பவரின் மகன் அபிஷேக், கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து முடித்த நிலையில் மேல் படிப்பிற்காக கலிபோனியா சென்றார். அங்கு உள்ள சான் பெனார்டினோவில் உள்ள பல்கலைக்கழகத்தில் அவர் படித்துக் கொண்டே பகுதி நேரமாக சாலையோர ஓட்டல் ஒன்றில் பணிபுரிந்து வந்தார்
இந்த நிலையில் நேற்று அபிஷேக் பணிபுரிந்த ஓட்டல் அருகே நடைபெற்ற துப்பாக்கி சூடு சம்பவம் ஒன்றில் அபிஷேக் பரிதாபமாக கொல்லப்பட்டார். இதுகுறித்து அமெரிக்க மற்றும் இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்டு நடந்தது என்ன? என்று விளக்கம் கேட்டு வருவதாகவும் ஆனால் இன்னும் தங்களுக்கு தெளிவான விளக்கம் கிடைக்கவில்லை என்றும் அபிஷேக் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்
இதனை அடுத்து அபிஷேக்கின் உடலை பெற அவரது சகோதரர் அமெரிக்கா செல்ல இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments