கடும் வெப்பத்தால் தவித்து வரும் இந்திய மாநிலங்கள்!!!

  • IndiaGlitz, [Thursday,May 28 2020]

 

தற்போது இந்தியாவின் பெரும் பகுதிகளில் வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. தலைநகர் டெல்லியில் வெப்பநிலை 47.6 டிகிரி செல்சியஸாக (120 பாரன்ஹிட்டாகவும்) பதிவாகி இருக்கிறது எனச் செய்திகள் வெளியாகி இருக்கிறது. இந்த அளவு வெப்பமானது கடந்த 18 ஆண்டுகளில் இதுவே முதல் முறை எனவும் கூறப்படுகிறது. இந்த வெப்பநிலை மேலும் அதிகரிக்கும் எனவும் வானிலை ஆராய்ச்சி தரவுகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் அடுத்து வரும் சில தினங்களுக்கு வெப்பநிலை 50 டிகிரி செல்சியஸாக அதாவது கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வெப்பம் பதிவாகும் எனவும் கூறப்படுகிறது. செவ்வாய்கிழமை ராஜஸ்தானில் வெப்பநிலை 50 டிகிரி செல்சியஸாக பதிவாகி இருந்தது. அதேபோல பஞ்சாப், ஹரியாணா, உத்திரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் 40 டிகரி செல்சியஸாக பதிவானது. தலைநகர் டெல்லியில் கடந்த 18 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வெப்பநிலை அதிகரித்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. மக்கள் தொகை அதிகமாக உள்ள இந்தியாவில் வெப்பநிலை அதிகரிப்பு கடும் தண்ணீர் பஞ்சத்தையும் ஏற்படுத்தும் எனவும் கூறப்படுகிறது. மே மாதத்தின் தொடக்கத்திலேயே சென்னையில் தண்ணீர் பிரச்சனை ஆரம்பித்து விட்டதாக செய்திகள் வெளியானது. தற்போது இப்பிரச்சனை தலைநகர் டெல்லியிலும் தலை தூக்கி இருக்கிறது.

இந்த ஆண்டு தொடங்கியிருக்கும் வெப்பநிலை அதிகரிப்பால் இதுவரை யாரும் உயிரிழக்கவில்லை எனக் கூறப்படுகிறது. ஆனால் கடந்த 2015 இல் இருந்து இந்தியாவில் நிலவிய வெப்ப நிலை அதிகரிப்பால் கிட்டத்தட்ட 3,500 பேர் இறந்து விட்டதாகவும் தரவுகள் தெரிவிக்கின்றன. கொரோனா பரவல் எண்ணிக்கையில் தற்போது இந்தியா உலக அளவில் 10 ஆவது இடத்தைப் பிடித்து கடும் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதைத்தவிர அசாம் மற்றும் மேகாலயா பகுதிகளில் கடும் மழை பெய்து வருகிறது. அம்மாநிலங்களில் நிலவும் தொடர் மழையால் பல்வேறு சிக்கலுக்கு ஆளாகி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இன்னொரு பக்கம் பாலைவன வெட்டுக்கிளிகள் ஜெய்ப்பூர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் போன்ற பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களை அழித்து வருகின்றன. கடந்த வாரத்தில் ஏற்பட்ட ஆம்பன் புயலால் மேற்கு வங்கம் போன்ற கிழக்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் கடுமையான அழிவுகளைச் சந்தித்து இருக்கிறது. உயிரிழப்பும் 100 க்கு மேல் பதிவாகி இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்படி பல நெருக்கடிக்கிடையில் இந்தியாவில் வெப்பநிலையும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது.

More News

தமிழகத்தில் அதிகரிக்கும் குணமானோர் எண்ணிக்கை: இன்றைய கொரோனா நிலவரம்

தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறித்த தகவலை சுகாதாரத்துறை தினந்தோறும் அறிவித்து வரும் நிலையில் சற்றுமுன் தமிழகத்தில் இன்றைய பாதிப்பு

அனுஷ்காவை டைவர்ஸ் செய்துவிடுங்கள்: விராத் கோஹ்லிக்கு பாஜக எம்.எல்.ஏ ஆலோசனை

பிரபல பாலிவுட் நடிகையும் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியின் மனைவியுமான அனுஷ்கா சர்மா சமீபத்தில் தயாரிப்பாளராக மாறி உள்ளார் என்பது தெரிந்ததே.

கொரோனாவிற்கு பின் திறக்கப்பட்ட திரையரங்கில் திரையிடப்பட்ட தமிழ் திரைப்படம்!

கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு காரணமாக திரைப்படங்களின் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டது மட்டுமின்றி திரையரங்குகளும் மூடப்பட்டன.

டிக்கிலோனா 2வது லுக்: ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்த சந்தானம்

சந்தானம் நடித்த 'டிக்கிலோனா' திரைப்படத்தின் புரமோஷன் நேற்று முதல் தொடங்கிய நிலையில் மூன்று நாட்களில் சந்தானத்தின் மூன்று லுக்குகள் வெளியாகும் என சந்தானம்

1500 சினிமா கலைஞர்களின் வங்கிக்கணக்கில் தலா ரூ.3000 டெபாசிட் செய்த ரஜினி பட நடிகர்

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக படப்பிடிப்பு இல்லாமல் இருப்பதால் சினிமா கலைஞர்கள் பலரும் சாப்பாட்டுக்கே வழியில்லாமல் கஷ்டப்பட்டு கொண்டிருக்கின்றனர்