கொரோனா வைரஸ் எதிரொலி: இன்று ஒரே நாளில் 6 லட்சம் கோடி ரூபாய் நஷ்டம் அடைந்த இந்தியர்கள்
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா வைரஸ் காரணமாக உலகமெங்கும் பொருளாதார சரிவு ஏற்பட்டிருக்கும் நிலையில் கடந்த சில நாட்களாக இந்திய பங்குசந்தைகள் பெரும் சரிவை சந்தித்து வருகிறது. இன்று ஒரே நாளில் இந்திய பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 2,700 புள்ளிகளும், நிப்டி 750 புள்ளிகளும் குறைந்துள்ளது என்பதால் முதலீட்டாளர்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர்
இன்று ஒரு நாளில் மட்டும் பங்கு சந்தை முதலீட்டாளர்களுக்கு சுமார் 6 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. உலகம் முழுவதும் குறிப்பாக ஆசிய நாடுகளின் பங்குச்சந்தை மிக கடுமையான சரிவை சந்தித்து வருகிறது
இன்றைய பங்குச் சந்தையில் இன்ஸ்டன்ட் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, ஹெச்டிஎப்சி வங்கி, ஆக்ஸிஸ் வங்கி ஆகியவற்றின் பங்குகள் பெரும் சரிவை சந்தித்துள்ளதாகவும் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் பங்குகளும் மிகப்பெரிய அளவில் சரிவை சந்தித்து இருப்பதாகவும் தெரிகிறது. அதேபோல் தங்கம், வெள்ளி உள்பட கமாடிட்டி பொருட்களின் விலையும் கடும் சரிவை சந்தித்துள்ளது. இதேபோல் தொடர்ந்து பங்குச்சந்தை சரிவு ஏற்பட்டால் பங்குசந்தையில் முதலீடு செய்திருக்கும் முதலீட்டாளர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments