கொரோனாவை ஒழிக்க இந்திய விஞ்ஞானிகளின் அசத்தல் கண்டுபிடிப்பு!
- IndiaGlitz, [Thursday,February 10 2022]
கொரோனா வைரஸின் கோரப்பிடியில் சிக்கி உலகமே தலைகீழாக மாறியிருக்கிறது. மேலும் 1,2,3 ஆவது அலை மற்றும் உருமாறிய கொரோனா வைரஸ் எனத் தொடர்ந்து அதன் தாக்கம் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் இந்திய விஞ்ஞானிகள் கொரோனா வைரஸில் இருந்து முழுமையாகத் தப்பித்துக் கொள்வதற்குப் புதிய மாஸ்க் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளனர். தாமிரத்தால் செய்யப்பட்ட இந்த மாஸ்க் வைரஸ் மற்றும் பாக்டீரியாவை ஆரம்ப நிலையிலேயே அழித்துவிடும் திறனும் உருவாக்கப்பட்டு இருக்கிறது. மேலும் இந்த மாஸ்க் எளிதாக மக்கிவிடும் எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
மத்திய அறிவியல் தொழில்நுட்ப அமைச்சகத்தால் அறிமுகப்படுத்தப் பட்டு இருக்கும் தாமிரத்தால் ஆன புதிய மாஸ்க் கொரோனா பரவலில் இருந்த மனிதர்களை முற்றிலும் காக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும் தடினமான மாஸ்க் வகைகளை மாட்டிக் கொண்டு அவஸ்தை படும் நபர்களுக்கு இது எளிமையாக சுவாச அனுபவத்தைக் கொடுக்கும் எனவும் ஒரு முறைக்கு மேல் இதைத் துவைத்து பயன்படுத்த முடியும் என்றும் கூறப்பட்டிருக்கிறது.