10 ஓவரில் ஆர்சிபி கதை முடிந்தது… விரக்தியில் புலம்பி தள்ளிய விராட் கோலி!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஐபிஎல் 14 ஆவது சீசன் தொடரில் 31 ஆவது போட்டி நேற்று கொல்கத்தா அணிக்கும் பெங்களூரு அணிக்கும் இடையிலே நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் களம் இறங்கிய பெங்களூரு அணி வெறும் 92 ரன்களில் சுருண்டுவிட, இவர்களை எதிர்த்து களமிறங்கிய கொல்கத்தா அணியின் அறிமுக வீரர்களே வெறும் 10 ஓவர் ஒ1 விக்கெட்டில் போட்டியை முடித்துவிட்ட ஆச்சர்யம் நேற்று நடைபெற்றது. இதைப்பார்த்து ரசிகர்கள் மிரண்டுபோகத்தான் செய்தனர்.
முதலில் டாஸ் வென்ற ஆர்சிபி அணியின் கேப்டன் கோலியும் நட்சத்திர வீரர் தேவ்தத்தும் களமிறங்கினர். ஆனால் வெறும் 5 ரன்களில் கோலி வெளியேற அடுத்து தேவ்தத் 22 ரன்களில் அவுட்டானார். இந்த ரன்னே நேற்றைய பெங்களூரு அணியின் அதிகப்பட்சமான ரன்னாகவும் இருந்தது.
அடுத்து அணியின் நம்பிக்கை நட்சத்திரமாகப் பார்க்கப்படும் இளம் வீரர் ஸ்ரீகர் பரத் வெறும் 16 ரன்களில் வெளியேறினார். பின்னர் ரஸல் வீசிய பந்து வீச்சில் டி வில்லியர்ஸ் கிளீன்போல்ட். இதனால் ஆர்சிபி 52 ரன்கள் எடுத்தபோதே 4 விக்கெட்டுகளை இழந்திருந்தது.
இதற்கிடையில் கொல்கத்தா அணியின் இளம் பவுலர் வருண் சக்ரவர்த்தி தனது அபாரமான பந்து வீச்சால் 3 விக்கெட்டுகளை காலி செய்தார். வெறும் 4 ஓவர் பந்துவீச்சில் 13 ரன்களை மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை காலி செய்தது வருண் சக்கரவர்த்தியை நேற்றைய போட்டியில் ஹீரோவாக்கியது. இதில் மேக்ஸ்வெல் ஒரு பந்தைக்கூட சந்திக்காமல் வெளியேறினார். அடுத்து வந்த இலங்கை வீரர் ஹஸரங்கா முதல் பந்திலேயே எல்பி ஆகி வெளியேறினார். பின்னர் வந்த பேபியும் 7 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இப்படியே சரிந்து கொண்டிருந்த ஆர்சிபி, ஜெமிசன் ஓவரில் கைலே விக்கெட்டை இழந்தது. ஃபெர்குசன் ஓவரில் வெறும் 12 ரன்களுக்கு ஹர்ஷல் படேல் கடைசி விக்கெட்டாக வெறியேறினார். இதனால் ஆர்சிபி 19 ஆவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 92 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது.
இந்த ரன்களை வெறும் 1 விக்கெட் இழப்பிற்கு கொல்கத்தா அணி சரிசெய்ததுதான் தற்போது பெரும் சுவாரசியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அறிமுக வீரர்களாக களம் இறங்கிய ஷுப்மன் கில் மற்றும் வெங்கடேஷ் ஐயர் இருவரும் போட்டிப்போட்டு கொண்டு நேற்று ரன்களை குவிக்க ஆரம்பித்தனர். இதில் ஷுப்மன் 34 பந்துகளில் 48 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். அவருடைய ரன்களில் 6 பவுண்டரி மற்றும் 1 சிக்ஸர் இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
வெங்கடேஷ் ஐயர் 27 பந்துகளில் 41 ரன்களை விளாசினார். இதில் 7 பவுண்டரி ஒரு சிக்ஸர். இந்த சிக்ஸரைப் பார்த்துதான் ரசிகர்கள் மிரண்டு போயுள்ளனர். இந்நிலையில் கொல்கத்தா அணி 10 ஓவர்களில் 1 விக்கெட்டை இழந்து 94 ரன்களை எடுத்துதிருந்தது. இதனால் 7 ஆவது இடத்தில் மோசமான ரன் ரேட்டுடன் இருந்த கொல்கத்தா அணி தற்போது 6 புள்ளிகளைப் பெற்று 5 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
மற்றொரு புறம் ஆர்சிபி இதுவரை விளையாடிய 8 போட்டிகளில் 3 ஆவது தோல்வியை சந்தித்து இருக்கிறது. இதனால் விரக்தியடைந்த கேப்டன் கோலி செய்தியளார் சந்திப்பில், “பேட்டிங்கில் பார்ட்னர்ஷிப் முக்கியம். போட்டியின் ஆரம்பத்திலேயே பனிப்பொழிவு இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. 41/1 லிருந்து 20 ரன்களில் 5 விக்கெட்டுகள் காலியானது. இது ஒரு எச்சரிக்கை மணி. இது 2 ஆவது சுற்றின் ஆரம்பத்திலேயே ஏற்பட்டதால் நல்லது. பேட்டிங் சரியில்லை என்று நீங்கள் கருதலாம். ஆனால் தொழில் பூர்வ கிரிக்கெட் வீரர்களாக சூழ்நிலைக்கேற்ப அட்ஜஸ்ட் செய்து கொள்வோம்.
அட்ஜஸ்ட்மெண்டு செய்துகொள்ள சில வேளைகளில் ஒரு போட்டித் தேவைப்படும். அது 2 ஆவது போட்டியாக மாறி விடக்கூடாது. வருண் சக்ரவர்த்தி அபாரமாக வீசினார். இந்தியாவிற்கு ஆடும்போது முக்கிய வீரராகத் திகழ்வார். வருண் சக்ரவர்த்தி இந்தியாவுக்காக விரைவில் ஆடவிருக்கிறார். 8 போட்டிகளில் 5 இல் வென்றுள்ளோம். இங்கும் அங்கும் ஒன்றிரண்டு தோல்விகளை எதிர்பார்த்தோம். அடுத்த போட்டியிலிருந்து வெற்றி பெறுவதற்கான அணி எங்களிடம் உள்ளது. வலுவான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம்” என்று கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com