டி.எம்.செளந்திரராஜனுக்கு மத்திய அரசு செய்த கெளரவம்

  • IndiaGlitz, [Friday,January 13 2017]

எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ஜெமினிகணேசன், நாகேஷ், ஜெய்சங்கர், ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், சத்தியராஜ் உள்பட மூன்று தலைமுறை நடிகர்களுக்கு தனது காந்தக்குரலால் ஏராளமான பாடல்களை பாடிய பிரபல பாடகர் டி.எம்.செளந்திரராஜன் நினைவாக மத்திய அரசு ரூ.5 மதிப்பில் தபால்தலை ஒன்றை வெளியிட்டுள்ளது.
1950ஆம் ஆண்டு முதல் 1991ஆம் ஆண்டு வரை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட 11 இந்திய மொழிகளில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்படப்பாடல்களையும், 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆன்மிக பாடல்களையும் பாடி ரசிகர்களின் மனதில் இன்று குடியிருந்து வருகிறார்.
கடந்த 2010ஆம் ஆண்டில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் கலைஞர் கருணாநிதி எழுதிய 'செம்மொழி என தமிழ் மொழியாம்' என்ற பாடலையும் செளந்திரராஜன் பாடியுள்ளார்.
இசைத்துறையில் பல்வேறு சாதனைகள் செய்துள்ள டி.எம்.செளந்திரராஜனை கெளரவிக்கும் வகையில் தற்போது தபால் தலை ஒன்றை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதற்கு, அவருடைய குடும்பத்தினர் சார்பிலும், ரசிகர்கள் சார்பில் மத்திய அரசுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டு உள்ளது.

More News

முடிஞ்சா குடியரசு தலைவர் ஆட்சியை கொண்டு வாங்க..சீமான்

தமிழகத்தில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தினால் குடியரசு தலைவர் ஆட்சியை கொண்டு வர வேண்டும் என்று சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்

சசிகலாவுடன் பாரதிராஜா, பாக்யராஜ் உள்பட திரையுலக பிரபலங்கள் சந்திப்பு

புரட்சி தலைவர் எம்ஜிஆரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இந்த வருடம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்துவதற்கு தமிழ்நாடு திரைப்படத்துறை திட்டமிட்டுள்ளது

முதல்நாள் வசூலில் 'கபாலி', 'தெறி'யை அடுத்து சாதனை படைத்த 'பைரவா'

இளையதளபதி விஜய் நடித்த 'பைரவா' திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்றது.

நயன்தாராவுடன் நடிப்பது உண்மையா? விஷால் விளக்கம்

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தற்போது பெரிய நடிகர்களுடன் ஜோடியாக நடிப்பதை தவிர்த்துவிட்டு நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டுமே நடித்து வருகிறார்.

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் களமிறங்கிய ஐடி ஊழியர்கள்

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டத்தில் கிட்டத்தட்ட  தமிழர்கள் அனைவருமே ஒன்று சேர்ந்துவிட்டனர்...