பல பெண்களுடன் தொடர்பு: பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மீது மனைவி புகார்
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி. இவர் மீது இவரது மனைவி ஹசின் ஜகான் திடுக்கிடும் குற்றச்சாட்டுக்களை தனது சமூகவலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.
முதலில் ஹசின் சமூக வலைத்தள பக்கம் ஹேக் செய்யப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் தனது பக்கத்தை யாரும் ஹேக் செய்யவில்லை என்றும் தான் கூறிய அனைத்து தகவல்களும் உண்மை என்று கூறியதோடு, தனது கணவர் பல பெண்களுடன் சாட் செய்த புகைப்பட ஆதாரத்தையும் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்தார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் தனது கணவர் சாட் செய்யும் பெண்களில் ஒருவர் பாகிஸ்தானை சேர்ந்த விபச்சாரி என்றும் ஹசின் திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார்.
பின்னர் இதுகுறித்து தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் கூறிய ஹசின், 'ஷமியின் காருக்குள் அவருக்கு டெல்லி டேர்டெவில்ஸ் அணி பரிசாக கொடுத்த செல்போன் இருந்ததாகவும், அந்த போனை தற்செயலாக எடுத்து பார்த்தபோது தான் அவருக்கு பல பெண்களுடன் இருந்து வந்த தொடர்பு தனக்கு தெரிய வந்ததாகவும் கூறியுள்ளார்.
அதுமட்டுமின்றி கடந்த சில மாதங்களாக தனது கணவர் ஷமி, அவரது தாய் மற்றும் சகோதரர் ஆகியோர் தனக்கு மனரீதியிலான தொல்லைகள் கொடுத்து வந்ததாகவும் அவர் அந்த பேட்டியில் குற்றஞ்சாட்டியுள்ளார். ஹசினின் இந்த குற்றச்சாட்டுக்கள் முகமது ஷமியின் ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout