வெறும் 5 நிமிஷத்துல கொரோனா கண்டறியும் முறை… விஞ்ஞானிகளின் அசத்தல் கண்டுபிடிப்பு!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா பரிசோதனையில் புதிய திருப்பமாக வெறும் 5 நிமிடத்தில் கொரோனா பாதிப்பு இருக்கிறதா என்பதைக் கண்டறியும் சோதனை முறை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இந்தச் சோதனை முறையை இந்திய வம்சாவளி விஞ்ஞானியான திபஞ்சன் பான் என்பவரின் தலைமையிலான குழு கண்டுபிடித்து உள்ளது.
அமெரிக்காவின் இலினாய்ஸ் பல்கலைக் கழகத்தை சேர்ந்த இந்திய வம்சாவளி விஞ்ஞானி தலைமையிலான ஆராய்ச்சி குழு வெறும் 5 நிமிடத்தில் கொரோனா பரிசோதனை செய்யும் சோதனை முறை ஒன்றை கண்டுபிடித்து உள்ளனர். இது காகித அடிப்படையிலானது என்றும் கிராபினை கொண்டு மின்வேதியியல் சென்சார் தொடுதிறன் மூலம் இந்தக் கருவி வடிவமைக்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதுவரை கொரோனா பரிசோதனை முறைக்கு ஆர்.என்.ஏ முறைதான் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்தப் பரிசோதனை முறையில் கொரோனா பாதிப்பு இருக்கிறதா என்பதைத் தெரிந்து கொள்ள பல மணி நேரங்கள் வரை காத்திருக்க வேண்டி இருக்கிறது. ஆனால் புதிய கண்டுபிடிப்பின் மூலம் வெறும் 5 நிமிடத்தில் கொரோனா மூலக்கூறு கொண்ட மாதிரியை மிக எளிமையாக அடையாளம் கண்டு கொள்ள முடியும் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில் அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,164 ஆக பதிவாகி இருக்கிறது. இதுவரை 15 லட்சத்து 74 ஆயிரம் பேர் உயிரிழந்து உள்ளனர். உலகிலேயே அதிகமான கொரோனா உயிரிழப்பு அமெரிக்காவில்தான் பதிவாகி இருக்கிறது. அடுத்ததாக பிரேசில்-1,79,032, இந்தியா- 1,41,360, மெக்சிகோ – 1,10,874, இங்கிலாந்து – 62,566, இத்தாலி- 61,739, பிரான்ஸ்- 56,648, ஈரான்- 51,212, ஸ்பெயின் – 47,019 போன்ற நாடுகளில் கொரோனா உயிரிழப்புகள் அதிகமாகக் காணப்படுகின்றன.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com