மீண்டும் டாக்டர் தொழிலுக்கு திரும்பும் 'மிஸ் இங்கிலாந்து' பட்டம் வென்ற இந்திய பெண்
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த 2019 ஆம் ஆண்டு ’மிஸ் இங்கிலாந்து’ பட்டம் வென்ற இந்திய வம்சாவளி பெண் கடந்த சில மாதங்களாக டாக்டர் தொழிலை விட்ட நிலையில் தற்போது கொரோனா வைரஸ் நெருக்கடி காரணமாக மீண்டும் டாக்டர் தொழிலுக்கு திரும்ப உள்ளதாக தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்
பாஷா முகர்ஜி என்ற 24 வயது பெண், 9 வயதாக இருக்கும்போதே தனது குடும்பத்தினருடன் இங்கிலாந்து நாட்டுக்கு சென்று விட்டார். அங்கேயே படித்து வளர்ந்த பாஷா அதன்பின் இரண்டு மெடிக்கல் டிகிரிகளையும் பெற்றார். இங்கிலாந்தில் உள்ள ஒரு மிகப் பெரிய மருத்துவமனையில் பணி புரிந்து கொண்ட போதுதான் திடீரென அவர் அழகி போட்டியில் கலந்து கொண்டார். அந்த அழகி போட்டியில் அவர் 2019ஆம் ஆண்டுக்கான மிஸ் இங்கிலாந்து’ பட்டம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது
அதனை அடுத்து டாக்டர் தொழிலை கைவிட்டு இந்தியா திரும்பிய பாஷா, மேலும் பல அழகிப் போட்டிகளில் கலந்து கொள்ளவும் மாடலிங் தொழிலிலும் முயற்சி செய்தார். இந்த நிலையில் தற்போது உலகம் முழுவதும் கொரோனா வரைஸால் கொத்துக் கொத்தாக மனித இனமே அழிந்து கொண்டிருப்பதையும் குறிப்பாக தான் வளர்ந்த இங்கிலாந்து நாட்டில் மிக மோசமாக கொரோனா அழிவுகளை ஏற்படுத்தி இருப்பதையும் கண்டறிந்து இந்தியாவில் இருக்கும் பாஷா திரும்பவும் இங்கிலாந்து சென்று அங்குள்ள மக்களுக்கு டாக்டர் பணி செய்து சேவை செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார்
இங்கிலாந்து மக்களை காப்பாற்றுவது தனது கடமைகளில் ஒன்று என்று கூறியுள்ள அவர் தான் ஏற்கனவே பணிபுரிந்த மருத்துவமனையில் பணிபுரிந்து, கொரோனா வைரஸால் தாக்கப்பட்டவர்களுக்கு சேவை செய்ய முடிவு செய்ததாகவும் கூறியுள்ளார். அவரது இந்த முடிவை மருத்துவமனை நிர்வாகிகள் வரவேற்றுப் பாராட்டியுள்ளனர்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout