அமெரிக்காவில் கொலை செய்யப்பட்ட கேரள நர்ஸ்: கணவனே வெறித்தனமாக கொன்ற கொடூரம்
Send us your feedback to audioarticles@vaarta.com
கேரள மாநிலத்தைச் சேர்ந்த நர்ஸ் ஒருவர் அமெரிக்க மருத்துவமனையில் பணி செய்து கொண்டிருந்த நிலையில் அவரது கணவரே அவரை கொடூரமாக குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தைச் சேர்ந்த மெரின் ஜாய் என்ற 26 வயது பெண்மணி அமெரிக்காவில் உள்ள புளோரிடாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் நர்ஸாக கடந்த சில ஆண்டுகளாக பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த செவ்வாய்க்கிழமை வழக்கம்போல் இரவு பணியை முடித்துவிட்டு மருத்துவமனையில் இருந்து வெளியேறிய போது திடீரென மர்ம நபர் ஒருவரால் கத்தியால் குத்தப்பட்டார். இதனையடுத்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து அமெரிக்க போலீசார் விசாரணை செய்தபோது நர்ஸ் மெரின் ஜாய்யை கத்தியால் குத்தியவர் அவரது கணவர் பிலிப்மேத்யூ என்பது தெரியவந்தது. இதனை அடுத்து போலீஸ் அதிகாரிகள் அவரை கைது செய்தனர். இதுகுறித்து அமெரிக்க போலீசார் கூறுகையில் ’இரவு பணியை முடித்துவிட்டு மெரின் ஜாய் மருத்துவமனையை விட்டு வெளியேறும் போது அவரது கணவர் பிலிம்மேத்யூ அவரை பிடித்து இழுத்து பல முறை கத்தியால் பயங்கரமாக தாக்கி உள்ளார். இதனை அடுத்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார் என்று கூறியுள்ளனர்
கடந்த 2016 ஆம் ஆண்டு மெரின் ஜாய்க்கும், பிலிப்மேத்யுக்கும் திருமணம் நடந்தது என்றும், இந்த தம்பதிகளுக்கு இரண்டு வயதில் ஒரு குழந்தை உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஒரு ஆண்டாக இருவரும் தனித்தனியாக பிரிந்து வாழ்கின்றனர் என்பதும் குழந்தை தாயின் அரவணைப்பில் உள்ளது என்பதும் குழந்தையை மெரின் ஜாய் பார்க்க அனுமதிக்கவில்லை என்பதால் பிலிப்மேத்யூ ஆத்திரத்தில் இருந்ததாகவும் குழந்தையை பார்க்க அனுமதிக்காத ஆத்திரத்தில் தான் தனது மனைவியை கத்தியால் அவர் குத்தியதாகவும் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout