10 வயது இளையவரான கணவரை பிரியும் 'இந்தியன்' பட நடிகை.. முடிவுக்கு வரும் திருமண உறவு..!

  • IndiaGlitz, [Thursday,September 26 2024]

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவான இந்தியன் படத்தில் நடித்த நடிகை, தன்னைவிட 10 வயது குறைவான ஒருவரை திருமணம் செய்து கொண்ட நிலையில், இந்த திருமண உறவு முடிவுக்கு வர இருப்பதாக கூறப்படுகிறது.

1996 ஆம் ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவான இந்தியன் திரைப்படத்தில் மனிஷா கொய்ராலா மற்றும் ஊர்மிளா ஆகிய இரண்டு நடிகைகள் நாயகிகளாக நடித்திருந்தனர். இதில் நடிகை ஊர்மிளா பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்த நிலையில், கடந்த 2016 ஆம் ஆண்டு மோசின் அக்தர் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஊர்மிளாவை விட அவரது கணவருக்கு 10 வயது குறைவு என்பதால் இந்த திருமணம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், கணவரிடம் இருந்து விவாகரத்து வேண்டும் என்று மும்பை குடும்ப நல நீதிமன்றத்தில் நடிகை ஊர்மிளா மனு தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நான்கு மாதத்திற்கு முன்பே அவர் மனு தாக்கல் செய்து விட்ட நிலையில், இருவரும் ஒருமித்த மனதுடன் விவாகரத்து மனு தாக்கல் செய்யவில்லை என்று கூறப்படுகிறது. இருப்பினும், இந்த விவாகரத்து மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகை மட்டுமல்லாமல் அரசியல்வாதியாகவும் இருப்பவர் நடிகை ஊர்மிளா. கடந்த 2019 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்த அவர், வடக்கு மும்பை மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். அதன் பின்னர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி சிவசேனா கட்சியில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

சதீஷின் 'சட்டம் என் கையில்' படம் பார்த்த 'கோட்' பிரபலம்.. என்ன சொன்னார் தெரியுமா?

தமிழ் திரை உலகில் முன்னணி காமெடி நடிகராக இருந்து, தற்போது ஹீரோவாக நடித்து வரும் நடிகர் சதீஷ் நடிப்பில் உருவான 'சட்டம் என் கையில்' என்ற திரைப்படம் நாளை திரையரங்குகளில்

'வேட்டையன்' படத்தில் அபிராமி கேரக்டர்.. சூப்பர் வீடியோ வெளியிட்ட லைகா..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'வேட்டையன்' திரைப்படம் அக்டோபர் 10ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

கணவருடன் சென்று ராகுல் காந்தியை சந்தித்த மேகா ஆகாஷ்.. என்ன காரணம்?

காங்கிரஸ் கட்சியின் எம்.பி. மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. ராகுல் காந்தியை சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட நடிகை மேகா ஆகாஷ், தனது கணவருடன் சென்று

18 ஆண்டுக்கு பின் கிடைத்த விடை.. இதற்கும் விடை தாருங்கள் 007..  இயக்குனர்   சிம்புதேவன் பதிவு வைரல்..!

18 ஆண்டுகளுக்கு முன் ரிலீசான தனது படத்தின் புதிருக்கு விடையை கண்டுபிடித்து கொடுத்த இணையதள பயனாளி ஒருவரிடம் இயக்குனர் சிம்பு தேவன் 'அந்த படத்தில் இருந்து நீக்கப்பட்ட இ

சின்னத்திரையில் ஒரு புதிய முயற்சி.. திரைப்படமாகும் தொலைக்காட்சி தொடர்..!

திரைப்படங்கள் போலவே, சின்னத்திரை தொடர்கள் நாளுக்கு நாள் பார்வையாளர்களின் வரவேற்பை பெற்றுக் கொண்டிருக்கிறது. மதியம் முதல் இரவு வரை தொடர்ச்சியாக தொலைக்காட்சி