நிரூபிக்கப்படாத மருந்தை ஏன் பரிந்துரை செய்கிறீர்கள்? ஷர்வர்தனுக்கு ஐஎம்ஏ சரமாரி கேள்வி!
- IndiaGlitz, [Monday,February 22 2021]
அறிவியல் பூர்வமாக நிரூபணம் செய்யாத கொரோனில் மருந்தை ஏன் கொரோனா வைரஸ் துணை சிகிச்சை மருந்தாகப் பரிந்துரைக் கிறீர்கள் என மத்தியச் சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்தனை நோக்கி ஐஎம்ஏ எனப்படும் இந்தியன் மெடிக்கல் அசோஷியேசன் சரமாரி கேள்வி எழுப்பி இருக்கிறது. மேலும் அறிவியல் பூர்வமாக நிரூபணம் ஆகாத ஒரு மருந்தை இந்திய மக்கள் மீது திணிக்க முயல்வது எப்படி சரியாகும் எனவும் கேள்வி எழுப்பப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
பாபா ராம்தேவின் பதஞ்சலி மருந்து உற்பத்தி நிறுவனம் கொரோனில் எனும் மருந்தை உற்பத்தி செய்து இருக்கிறது. இந்த மருந்தை கடந்த வாரம் யோகா குரு பாபா ராம்தேவ், சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன், மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி ஆகியோர் முன்னிலையில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. மேலும் ஆயுஷ் அமைச்சகம் இதற்கு அனுமதி அளித்துள்ளது. அதுவும் உலகச் சுகாதார அமைப்பின் சான்றிதழ் முறைகளின்படி சான்றிதழ் வழங்கப்பட்டு உள்ளதாவும் பதஞ்சலி நிறுவனம் தெரிவித்து உள்ளது.
இந்நிலையில் பதஞ்சலியின் நிறுவனத்தின் மருந்தின் தரம், திறன் பற்றி தாங்கள் எதுவும் சோதிக்கவில்லை என உலகச் சுகாதார அமைப்பு தனது டிவிட்டரில் மறுத்து உள்ளது. இதனால் இந்திய மருந்துகளின் நிறுவனம், ஐஎம்ஏவின் தலைவர் டாக்டர் ஜெயலால் அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்படாத ஒரு மருந்தை கோவிட்-19க்கு எதிராக மத்தியச் சுகாதாரத்துறை அமைச்சர் எப்படி தவறாகப் பரிந்துரைக்கலாம்? எனக் கேள்விய எழுப்பியதோடு, பரிசோதனைக்கான முடிவுகளையும் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொண்டு உள்ளார்.
இதனால் பாபா ராம்தேவ்வின் பதஞ்சலி நிறுவனம் தயாரித்த கொரோனில் மருந்து கொரோனா சிகிச்சையில் சர்ச்சையை சந்திக்கும் எனவும் கருத்துக் கூறப்படுகிறது.