கொரோனா ஆன்டிபாடியை அளக்க புது கருவி? பயன்படுத்துவது எப்படி?
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா வைரஸ் உடலில் புகுந்தவுடன் சுவாச உறுப்பை காலி செய்து விடுகிறது. தீவிரத்தால் உயிரையே பறித்து விடுகிறது. இதன் கொடூரம் தாங்காமல் மனித குலமே தற்போது அல்லாடி கொண்டு இருக்கிறது. இந்நிலையில் கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் உடலில் அந்நோய்க்கு எதிரான ஆன்டிபாடி இருக்கும். அந்த ஆன்டிபாடியின் அளவை பொறுத்து அந்த நபருக்கு மீண்டும் நோய்த்தொற்று ஏற்படாது என மருத்துவ உலகம் நம்புகிறது.
இந்நிலையில் கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் தங்களது உடலில் உள்ள கொரோனா ஆன்டிபாடிகளின் அளவை சுயமாக பரிசோதித்து பார்த்துக் கொள்ளும் வகையில் டிவ்கோவன் எனும் புது கருவி ஒன்று இந்தியாவில் உருவாக்கப்பட்டு உள்ளது. இந்தக் கருவியைக் கொண்டு ஆன்டிபாடிகளின் அளவை தொடர்ந்து கண்காணித்துக் கொள்ள முடியும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.
மேலும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ள இந்தக் கருவி வரும் ஜுன் 1 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரும் என்றும் தகவல் வெளியாகி இருக்கிறது. புதுடெல்லியில் உள்ள வான்கார்டு டயக்னாஸ்டிக்ஸ் பிரைவேட் லிமிடெட் எனும் நிறுவனம் தயாரித்துள்ள இந்த கருவி கொரோனா வைரஸின் எதிர்ப்பு பொருட்களான அதன் ஆன்டிபாடிகள் மற்றும் புரதத்தின் அளவை கண்டறியும் வகையில் உருவாக்கப்பட்டு உள்ளது.
கடந்த ஒரு வருடமாக டெல்லியில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் இந்தக் கருவி பரிசோதனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதாகவும் கடந்த ஏப்ரல் மாதம் இந்தக் கருவிக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழு ஒப்புதல் அளித்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் டிவ்கோவன் கருவி மூலம் ஆன்டிபாடியின் அளவைத் தெரிந்து கொள்ள 75 நிமிடங்கள் ஆகும் என்றும் இந்த கருவியை தொடர்ந்து 18 மாதங்கள் வரை பயன்படுத்தலாம் என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். ஒருமுறை பரிசோதனைக்கு 75 ரூபாய் செலவு ஆகும் என்றும் கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout