கொரோனாவை எதிர்க்க உதவும் இந்திய ஐ.ஐ.டி நிறுவனங்கள்!!! தயாரிப்புகள் என்னென்ன ???
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனாவை எதிர்கொள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள் தற்போது ரோபோக்கள், மென்பொருள்கள், ட்ரோன்கள் போன்றவற்றை உருவாக்கும் பணியில் தம்மை மும்மரமாக ஈடுபடுத்திக் கொண்டுள்ளன. ஐ.ஐ.டி கான்பூரில் கொரோனா தடுப்பூசி பற்றிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மெட்ராஸ் ஐ.ஐ.டி. யில் ஊரடங்கை கண்காணிப்பதற்காக ட்ரோன்கள் உருவாக்கப்பட்டு வருகிறது. மேலும், கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு உணவு, தண்ணீர் போன்றவற்றை எடுத்துச் செல்வதற்காக ரோப்போக்களும் உருவாகப்படுகின்றன.
டெல்லி மற்றும் கரக்பூர் ஐ.ஐ.டி நிறுவனங்களில் வென்டிலேட்டர்கள் மற்றும் விரைவாக கொரோனாவை கண்டறியும் சோதனை கருவி போன்றவை உருவாக்கப் பட்டுள்ளன. கொரோனாவின் ஆரம்பக் கட்டத்தில் இந்த தொழில்நுட்பக் கல்லூரிகள், துப்புரவு பணிகளுக்குத் தேவையான முகமூடிகளையும் உருவாக்கிக் கொடுத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. ரோப்பர் ஐ.ஐ.டி நிறுவனத்தில் காற்றின் மூலமாக கொரோனா பரவாமல் தடுப்பதற்கு குளிரூட்டப்பட்ட அழுத்த அறைகளை வடிமைத்து வருகின்றனர். இதனால் மருத்துவ ஊழியர்கள் நோயில் இருத்துத் தப்பித்துக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையும் ஏற்பட்டிருக்கிறது.
ரோப்பரில் உருவாக்கப்படும் போட் போன்ற தனியறைகள் உணவு, மருந்துகள், மருத்துவ உபகரணங்களை எளிதாக எடுத்துச் செல்ல வசதியாகவும் உருவாக்கப்பட்டுள்ளது. மெட்ராஸ் ஐ.ஐ.டி நிறுவனத்தில் பொது இடங்களில் பயன்படுத்த வசதியாக டச்லெஸ் சானிடைசர், டிஸ்பென்சர், முகக் கவசங்கள் என நாளொன்று க்கு1,000 என்ற எண்ணிக்கையில் உருவாக்கப்பட்டு வருகிறது. மேலும், நீண்டகாலத் திட்டங்களில் தடுப்பு மருந்து மற்றும் ட்ரோன்களும் உருவாக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
கான்பூர் ஐ.ஐ.டி நிறுவனத்தில் ரோபோவுடன் இணைக்கப்பட்ட ஒரு வென்டிலேட்டரின் முன்மாதிரியை உருவாக்கியிருக்கிறார்கள். மேலும் உள்ளூரில் பயன்படுத்த வசதியாக குறைந்த விலையில் வென்டிலேட்டர்களும் உருவாக்கப்பட்டுள்ளது. வளிமண்டலத்தில் இருந்து ஆக்சிஜனை எடுத்துக்கொள்ளும் இயந்திரத்தையும் வடிவமைத்திருக்கிறார்கள். இதனால் தேவையான ஆக்சிஜனை கடைகளில் சென்று வாங்கத் தேவையில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. டெல்லி ஐ.ஐ.டி நிறுவனத்தில் சுகாதாரப் பணியாளர்களுக்காக மூன்றடுக்கு முகமூடிகளை உருவாக்கியுள்ளனர்.
ரூர்க்கியில் உள்ள ஐ.ஐ.டி நிறுவனத்தின் பே
ராசிரியர் கமல்ஜெயின் எக்ஸ்-ரே ஸ்கேனைப் பயன்படுத்தி 5 வினாடிகளுக்குள் கொரோனா பாதிப்பை கண்டறியும் மென்பொருள் ஒன்றை உருவாக்கியிருக்கிறார். இந்த மென்பொருளை உருவாக்க பேராசிரியருக்கு 40 நாட்கள் செலவானதாகவும் கூறப்படுகிறது. தனது மென்பொருளை சோதிக்க எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தையும் பேராசிரியர் அணுகியிருக்கிறார்.
இந்த மென்பொருளைப் பயன்படுத்தும்போது நேரம் மற்றும் செலவு மிகவும் குறைவாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது. இந்த மென்பொருளை உருவாக்க இதயநோயுள்ள 60 ஆயிரம் நோயாளிகளின் எக்ஸ்ரேக்களை ஆராய்ந்ததாகவும் பேராசிரியர் கூறியிருக்கிறார். மேலும், தான் உருவாக்கிய மென்பொருளை பயன்படுத்தி ஒரு நபரின் எக்ஸ்ரேயின் படங்களை எளிதாக பதிவேற்றலாம் என்றும் பதிவெற்றிய படங்களை வைத்து அவருக்கு கொரோனா இருக்கிறதா என்பதை மென்பொருள் எளிதாக உறுதிப்படுத்திவிடும் எனவும் பேராசிரியர் கூறியிருக்கிறார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments