கொரோனா நேரத்தில் செய்தித்தாள் படிப்பது பாதுகாப்பனதா??, மத்திய அரசு அளித்த புதிய விளக்கம்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாகக் கூறப்பட்டாலும் புதிய தொற்றுகள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றன. இந்நிலையில் மக்கள் எப்படி தங்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற விதிமுறகைளை தொடர்ந்து மத்தியச் சுகாதாரத்துறை தெரிவித்து வருகிறது. அந்த வகையில் செய்தித்தாள் படிப்பது குறித்து மத்தியச் சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷவர்தன் புது விளக்கத்தை வெளியிட்டு உள்ளார்.
சமூக வலைத்தளம் வாயிலாக பொது மக்களிடம் கலந்துரையாடியபோது பேசிய ஹர்ஷவர்தன், செய்தித்தாள்கள் மூலம் கொரோனா பரவும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று தெரிவித்து உள்ளார். மேலும் கொரோனா காலத்தில் செய்தித்தாள்கள் படிப்பது முற்றிலும் பாதுகாப்பானதுதான் என்றும் கூறியுள்ளார். காலை நேர தேநீருடன் செய்தித்தாள் படிப்பது மகிழ்ச்சியான அனுபவம் என்றும் அவர் தனது உரையில் தெரிவித்து உள்ளார்.
செய்தித்தாள்களில் கொரோனா வைரஸ் பரவுவதற்கான வாய்ப்பு இல்லை எனக் கூறப்பட்டாலும் கடந்த சில தினங்களுக்கு முன்பு ரூபாய் நோட்டுகளில் கொரோனா வைரஸ் 24 நாட்கள் வரை தங்கியிருக்கும் என்ற புது அறிக்கையை விஞ்ஞானிகள் வெளியிட்டு இருந்தனர். அதைத் தொடர்ந்து சீனாவில் இருந்த 6 லட்சம் கோடி மதிப்பிலான நோட்டுகளை அரசாங்கம் பெற்றுக்கொண்டு அவற்றிற்குப் பதிலாகப் புதிய நோட்டுகளை மக்களிடம் மாற்றிக் கொடுத்ததாகவும் தகவல் வெளியானது என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதைத்தவிர சீனாவில் இறக்குமதி செய்யப்பட்ட கோழி இறைச்சியில் கொரோனா வைரஸ் பரவுவதாகவும் தகவல் வெளியானது. தற்போது பேக்கேஜ் செய்யப்பட்ட உணவுப்பொருளின் மேற்பரப்பில் கொரோனா வைரஸ் உயிருடன் இருப்பதும் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. இதுபோன்ற தகவல்களைத் தொடர்ந்து மக்கள் இன்னும் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என விஞ்ஞானிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments