பப்ஜி உள்ளிட்ட 118 சீன செயலிக்கு தடை: மத்திய அரசு மீண்டும் அதிரடி
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்தியா மற்றும் சீனா நாடுகளின் எல்லையில் உள்ள கால்வான் பள்ளத்தாக்கில் சமீபத்தில் இரு நாட்டு ராணுவ வீரர்களும் மோதிக்கொண்டதில் இந்திய தரப்பில் 20 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். சீன தரப்பில் 35 ராணுவ வீரர்கள் பலியானதாக கூறப்படுகிறது.
இந்த மோதலை அடுத்து மத்திய அரசு அதிரடியாக சீனாவின் 59 முக்கிய செயலிகளுக்கு தடை விதித்தது. அதில் டிக் டாக், ஹலோ ஆப் உள்ளிட்ட பிரபலம் வாய்ந்த செயலிகளும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது இதனை அடுத்து சீனாவின் மற்ற செயலிகளும் அவ்வப்போது தடை செய்யப்பட்ட நிலையில் தற்போது மேலும் 118 செயலிகள் தடை செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்தியாவில் பப்ஜி மொபைல் செயலிக்கு இளைஞர்கள் குறிப்பாக மாணவர்கள் அடிமையாகி வருவதாகவும், ஒரு சிலர் உயிரையும் இழந்து வருகின்றனர் என்று செய்திகள் அவ்வப்போது வெளியானதால் இந்த செயலியை இந்தியாவில் தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி பப்ஜி உள்ளிட்ட 118 செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இதனை அடுத்து இந்தியாவில் உள்ள இளைஞர்கள் ஏராளமானோர் பாதுகாக்கப்படுவதாக கருதப்படுகிறது. சீனாவுக்கு எதிராக இந்திய அரசு எடுத்து வரும் இந்த அதிரடி நடவடிக்கைகளுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments