இரட்டைக் குழந்தை… அடுத்த நாளே லாட்டரியில் 2 கோடி வென்ற அதிர்ஷ்டசாலி இந்தியர்!
- IndiaGlitz, [Thursday,December 30 2021]
அபுதாபியில் வசித்துவரும் இந்தியரான பிஜேஸ் போஸ் இரட்டைக் குழந்தைக்கு தந்தையான அடுத்தநாளே லாட்டரி மூலம் 2 கோடிக்கு அதிபராகியிருக்கிறார். இதனால் மகிழ்ச்சி கடலில் தத்தளித்துவரும் அவர் என்னுடைய குழந்தைகளின் அதிர்ஷ்டம்தான் என்று புலாங்கிதம் அடைந்துவரும் நிகழ்வுகளும் அரங்கேறியிருக்கின்றன.
பிஜேஸ் போஸ்க்கு அதிர்ஷ்டம் இதோடு நின்றுவிடவில்லை. கடந்த டிசம்பர் 23 ஆம் தேதி 1 மில்லியன் பிர்காம் வென்ற பிறகு மேலும் 25 மில்லியன், 2 மில்லியன் மற்றும் ரொக்கப் பரிசுத்தொகை போட்டிகளிலும் இவரால் கலந்துகொள்ள முடியும். இந்தத் தகவல்தான் தற்போது சோஷியல் மீடியாவில் கடும் வைரலாகி வருகிறது.
கடந்த 1992 ஆம் ஆண்டு முதல் துபாய் ஏர்போர்ட் நிறுவனம் சார்பாக அபுதாபியில் பிக் டிக்கெட் லாட்டரி விற்பனை செய்யப்படுகிறது. இந்த டிக்கெட் விற்பனை முடிந்து வாரம்தோறும் ஒரு வெற்றியாளர் அறிவிக்கப்படுவார். பின்னர் இந்த வெற்றியாளர்களைக் கொண்டு ஒரு மெகா போட்டி ஒன்று நடத்தப்படும். அதில் வெல்லும் முதல் போட்டியாளருக்கு 25 மில்லியன் பர்காம் இரண்டாம் போட்டியாளருக்கு 2 மில்லியன் பர்காம் அடுத்த போட்டியாளருக்கு ரொக்கப் பரிசு போன்றவை கிடைக்கும்.
அந்த வகையில் டிசம்பர் மாத முதல் வாரத்தில் Haryn Sheikh என்பவரும் அடுத்த வாரத்தில் Raffek என்பவரும் தலா 1 மில்லியன் பர்காம் பரிசுத்தொகையை வென்றனர். இதையடுத்து மூன்றாவதாக இந்தியாரான பிஜேஸ் போஸ்ஸும் இரட்டைக் குழந்தைக்கு தந்தையான அடுத்த நாளே 1 மில்லியன் பர்காம் பரிசுத் தொகையை கைப்பற்றியுள்ளனர். 1 மில்லியன் பிர்காம் என்பது இந்திய மதிப்பில் 2,65,26,816 ரூபாய் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த வெற்றியைத் தொடர்ந்து அடுத்தக்கட்டமாக நடத்தப்படும் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றிப்பெற்றால் 51,58,62,250 ரூபாய் வரை இந்த லாட்டரியில் வெல்ல முடியும் என்பதுதான் பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருக்கிறது.