ஒரே இரவில் லட்சாதிபதியான இந்திய விவசாயி!
- IndiaGlitz, [Wednesday,December 16 2020]
மத்திய பிரதேச மாநிலத்தில் ஏழை விவசாயியாக இருந்த ஒருவர் ஒரே இரவில் லட்சாதிபதியாக மாறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள கல்யாண்பூர் என்ற கிராமத்தில் லகான் யாதவ் என்ற 45 வயது விவசாயி சமீபத்தில் அரசிடம் இருந்து நிலத்தை குத்தகைக்கு எடுத்தார். அந்த நிலத்தை உழுது கொண்டிருந்த போது வித்தியாசமான ஒரு பொருள் தென்படவே அதை எடுத்து பார்த்தபோது அது மிகவும் விலையுயர்ந்த வைரம் என தெரியவந்தது
இதனை அடுத்து அவர் அதிகாரிகளிடம் சென்று காட்டிய போது அவர்கள் அதனை சோதனை செய்து விலை மதிப்புள்ள 14.98 காரட் வைரம் என்பதை உறுதிசெய்தனர். இதனையடுத்து அந்த வைரம் சமீபத்தில் ஏலத்தில் விடப்பட்ட நிலையில் ரூ.60 லட்சத்திற்கு ஏலம் போனது
இந்த பணத்தை வைத்து அவர் தனது குழந்தைகளை படிக்க வைக்க போவதாகவும், சொந்தமாக நிலம் வாங்கி விவசாயம் செய்யப் போவதாகவும் கூறினார். கடந்த சில நாட்களுகு முன்பு வரை தன்னுடைய குழந்தைகளையே ஏர் உழுவதற்கு பயன்படுத்தும் அளவுக்கு ஏழை விவசாயியாக இருந்த அவர் தற்போது அந்த பகுதியிலேயே மிகப்பெரிய லட்சாதிபதியாக மாறியுள்ளார்
மேலும் தான் படிக்கவில்லை என்பதால் தனது குழந்தைகளை நன்றாக படிக்க வைக்கப் போவதாகவும் மோட்டார் சைக்கிள் ஒன்று வாங்க போனதாகவும் சொந்த வீடு ஒன்றும் வாங்க போவதாகவும் அவர் பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்
ஏழை விவசாயி ஒருவர் ஒரே இரவில் லட்சாதிபதியாக மாறிய சம்பவம் மத்திய பிரதேச மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது