பிப்ரவரி தந்த அதிர்ஷ்டம்… ஒரே டிக்கெட்டில் கோடி ரூபாயை வென்ற இந்திய இளைஞர்!
- IndiaGlitz, [Wednesday,February 16 2022]
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில் வசித்துவரும் இந்திய இளைஞர் ஒருவர் லாட்டரி குலுக்கலில் 1 கோடி ரூபாய் பரிசுத்தொகையை வென்றுள்ளார். இந்த அதிர்ஷ்டத்துக்கு அவர் கூறிய காரணங்கள்தான் தற்போது பலருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் அபுதாபி பிக் டிக்கெட், எமிரேட்ஸ் டிரா, மஹ்சூஸ் டிரா என்ற பெயரில் பல்வேறு லாட்டரி குலுக்கல்கள் வாரந்தோறும் நடைபெறுகின்றன. இதைப் பெரும்பாலும் இந்தியர்களே விரும்பி வாங்குவதகாவும் கூறப்படுகிறது. இப்படி விற்கப்பட்ட அபுதாபி பிக் டிக்கெட் எனும் லாட்டரி குலுக்கலில் இந்திய இளைஞர் கோலன்தாஸ் அகமது ஷ்வுகதி என்பவர் தற்போது பரிசுத்தொகையைத் தட்டிச்சென்றுள்ளார்.
இரண்டு ஆண் குழந்தைகளுக்கு தந்தையான கோலன்தான் என்னுடைய இரண்டு மகன்களும் பிப்ரவரி மாதத்திலேயே பிறந்தனர். நானும் கடந்த வருடம் முதல் அபுதாபி பிக் டிக்கெட்டை வாங்கி வருகிறேன். ஆனால் இந்த பிப்ரவரி மாதம் எனக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுத்திருக்கிறது என நெகிழ்ச்சியோடு தெரிவித்துள்ளார்.
ஐக்கிய அரபு நாட்டில் கத்தார் அடுத்த தோஹா பகுதியில் வசித்துவரும் கோலன்தாஸ்க்கு இப்போது 5,00,000 திர்ஹம்ஸ் பரிசுத்தொகை கிடைத்திருக்கிறது. இந்திய மதிப்பில் 1,02,46,87 எனக் கணக்கிடப்பட்டுள்ள இந்தத் தொகையைத் தவிர கோலன்தாஸ் வரும் மார்ச் 3 ஆம் தேதி நடைபெறவிருக்கும் பிக் டிரா போட்டியிலும் இவரால் கலந்து கொள்ள முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.