கொரோனாவிற்கு சிகிச்சை அளித்து, இதுவரை நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட இந்திய மருத்துவர்கள்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனாவிற்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களும், அந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்படும் அவலம் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டே வருகிறது. முன்னதாக சீனாவில் இதுவரை 10 மருத்துவ செவிலியர்கள், மருத்துவர்கள் கொரோனா வைரஸ் நோய்க்குக் சிகிச்சை அளிக்கும்போது பாதிக்கப்பட்டதாக அந்நாடு தெரிவித்து இருந்தது. இதில் பலர் உயிரிழந்துள்ளனர். தற்போது இந்தியாவிலும் பாதிப்பு எண்ணிக்கை 4 ஆக உயர்ந்து இருக்கிறது.
இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்றுக்கு ஆளாகி உயிரிழந்த கர்நாடகத்தைச் சேர்ந்த 76 வயதான முதியவர் ஹீசைன் சித்திக்கிற்கு சிகிச்சை அளித்த 63 வயது மருத்துவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. அடுத்து, கேரளாவில் சித்திரை திருநாள் மருத்துவ அறிவியல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையளித்துவந்த மருத்துவர் ஒருவரும் கொரோனா நோய்த்தொற்றுக்கு ஆளாகியிருப்பது தெரியவந்தது. தற்போது உத்திரபிரதேசத்தில் கொரோனா இருக்கிறதா எனப் பரிசோதிக்கும் மருத்துவக் குழுவில் ஒரு மருத்துவருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியிருக்கிறது. அந்த மருத்துவக் குழுவில் இருந்த மற்ற 14 பேருக்கு நோய்த்தொற்று இல்லை என்பதும் உறுதியாகியிருக்கிறது.
டெல்லியில் மொஹல்லா மருத்துவமனையில் பணிபுரியிம் அரசு மருத்துவருக்கு கொரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதிச்செய்யப்பட்டுள்ளது. அவருடன் தொடர்புடைய மற்றவர்களும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதைத்தவிர, மும்பையில் சைஃபி மருத்துவமனையில் பணிபுரிந்துவந்த 85 வயதான மற்றொரு மருத்துவர் அவரது உறவினர் மூலமாக கொரோனா நோய்த்தொற்றுக்கு ஆளாகி உயிரிழந்த சம்பவம் அனைவரையும் வருத்தத்தில் ஆழ்த்தியது.
தமிழகத்திலும் கி.ஆ.பெ விஸ்வநாதம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒரு மருத்துவருக்கு கொரோனா அறிகுறி இருப்பதாத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். உலகம் முழுவதும் கொரோனா நோய்த்தொற்றுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களைவிட செவிலியர்கள் தான் அதிகம் பாதிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments