உக்ரைனில் இருந்து வெளியேற மறுத்த இந்திய டாக்டர்: அதிர்ச்சி காரணம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே கடந்த சில நாட்களாக போர் நடைபெற்று வரும் நிலையில் உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை வெளியேற்றும் பணியில் மத்திய அரசு தீவிரமாக உள்ளது என்பதும் இதுவரை ஆயிரக்கணக்கான இந்தியர்களையும் மாணவர்களையும் பத்திரமாக தாய்நாடுக்கு திரும்பி அழைத்து வந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்திய டாக்டர் ஒருவர் உக்ரைனில் வசித்து வரும் நிலையில் அவர் உக்ரைனில் இருந்து வெளியேற மறுத்து விட்டதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆந்திர மாநிலத்தை சேர்ந்த கிரிகுமார் என்பவர் கடந்த 2007 ஆம் ஆண்டில் மருத்துவம் படிப்பதற்காக உக்ரைன் சென்றுள்ளார். அதன்பின் மருத்துவராகி 2014ஆம் ஆண்டு முதல் அவர் உக்ரைனிலேயே எலும்பியல் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார் .
இந்த நிலையில் உக்ரைனில் தற்போது போர் நடந்து வரும் நிலையில் இந்தியர்கள் அனைவரும் உக்ரைனில் இருந்து வெளியேறி வருகின்றனர். ஆனால் டாக்டர் கிரிகுமார் மட்டும் உக்ரைனில் இருந்து வெளியேற மறுத்து விட்டதாக தெரிகிறது. டாக்டர் கிரிகுமார் தனது வீட்டில் செல்லப்பிராணிகளாக இரண்டு சிறுத்தைகளை வளர்த்து வருவதாகவும், அந்த சிறுத்தைகளை விட்டுவிட்டு இந்தியாவுக்கு சென்று விட்டால் சிறுத்தைகளுக்கு உணவு கிடைக்காத நிலை ஏற்படும் என்றும் அதனால் தனது செல்லப் பிராணிகளை விட்டு இந்தியாவுக்கு வர தயாராக இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும் தனது குடும்பத்தினர் தன்னை இந்தியா வருமாறு வற்புறுத்தியதாகவும் ஆனால் செல்லப்பிராணிகள் அனைத்தையும் வீட்டுக்கு அழைத்துச் செல்ல இந்தியா எப்போது அனுமதிக்குமோ, அப்போது தான் இந்தியா வருவேன் என்றும் கூறியுள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே இந்திய மாணவர் ஒருவர் உக்ரைனில் இருந்து செல்லப்பிராணியுடன் இந்தியா வந்துள்ளார் என்பது தெரிந்ததே.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments