ஒரு இன்ஸ்டா பதிவுக்கு இத்தனை கோடியா? அசர வைக்கும் விராட் கோலியின் சொத்து மதிப்பு!
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்தியக் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரராக இருந்துவரும் விராட் கோலியின் சொத்து மதிப்பு குறித்த விவரங்கள் வெளியாகி இருக்கும் நிலையில் அவருடைய சமூகவலைத் தளப்பதிவின் மூலம் அவருக்கு கிடைத்து வரும் வருமானம் குறித்த தகவல் வெளியாகி ரசிகர்களிடையே கடும் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.
பெங்களூரைச் சேர்ந்த வர்த்தகம் மற்றும் முதலீட்டு நிறுவனமான StockGro விராட் கோலியின் சொத்து மதிப்பு குறித்த தகவலை வெளியிட்டு உலகின் அதிக வருவமானம் ஈட்டும் நபர்களில் ஒருவராக இருக்கிறார் எனக் கூறியுள்ளது.
இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனாக இருந்த விராட் கோலி தற்போது நட்சத்திர வீரர்களுள் ஒருவராக இருக்கிறார். ஃபார்மை விட்டு சறுக்கிக் கொண்டே இருப்பதாக விமர்சனம் வைக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் விராட் கோலியின் முதலீடு, விளம்பரங்கள், சமூகவலைத் தளப்பக்கங்களின் வருமானம் என்று அவருடைய சொத்து மதிப்பு நாளுக்கு நாள் எகிறிக்கொண்டே போகிறது. அந்த வகையில் விராட் கோலியின் மொத்த மதிப்பு ரூ.1,050 கோடி எனக் கணக்கிடப்பட்டுள்ளது.
அதில் கோலி 7 கோடிக்கு பிசிசிஐ யுடன் ஒப்பந்தம் செய்துள்ளார். அதைத்தவிர ஒரு டெஸ்ட் போட்டிக்கு 15 லட்சமும் ஒருநாள் போட்டிக்கு தலா 6 லட்சமும், ஒரு டி20 போட்டிக்கு 3 லட்சமும் சம்பளமாக வழங்கப்படுகிறது.
இந்தியன் பிரீமியர் லீக்கில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடும் அவர் ஆண்டுக்கு 15 கோடி சம்பளம் வாங்குகிறார்.
கோலி பல பிராண்டுகள் மற்றும் உணவகங்களில் முதலீடுகளை வைத்துள்ளார். அந்த வகையில் ப்ளூ ட்ரைப், யுனிவர்சல், ஸ்போர்ட்ஸ்பிஸ், எம்பிஎல், ஸ்போர்ட்ஸ் கான்வோ போன்ற நிறுவன முதலீடுகளின் மூலம் வருமானம் ஈட்டிவருகிறார்.
சொந்த முதலீடுகளைத் தவிர இந்தியாவில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ், எம்ஆர்எஃப், மிந்த்ரா, வீவோ, அமெரிக்கன் டரிஸ்டர், நாய்ஸ், சிந்தால், வாலினி உள்ளிட்ட 18 பிராண்ட் பொருட்களுக்கு விளம்பரதாரராக செயல்பட்டு வருகிறார். இந்த பிராண்டுகளுக்காக ஒரு விளம்பரத்தில் நடிக்க ஆண்டுக்கு 7.50 கோடி-10 கோடி வரை சம்பளம் பெற்று ஒட்டுமொத்தமாக பிராண்டு பொருட்கள் மூலம் சுமார் 175 கோடி வரை சம்பாதிக்கிறார்.
இந்தியன் சூப்பர் லீக் கிளப் எஃப்சி கோவா, டென்னிஸ் அணி மற்றும் மல்யுத்த அணி போன்ற அணிகளுக்கு இணை உரிமையாளர் என்ற முறையில் முதலீடுகளைச் செய்து அதிலும் சம்பாதித்து வருகிறார்.
இந்நிலையில் விராட் கோலி ஒரு இன்ஸ்டாகிராம் பதிவிற்கு ரூ.8.9 கோடி வருமானம் ஈட்டுவதாகவும் அதேபோல ஒரு டிவிட்டர் பதிவிற்கு ரூ.2.5 கோடி வருமானத்தை ஈட்டுவதாகவும் கூறப்படுகிறது. மேலும் விலையுயர்ந்த வாட்ச், வாகனங்களைத் தவிர்த்து மும்பையில் ரூ.34 கோடி மதிப்பில் ஒரு வீடு, குருகிரால் ரூ.80 கோடி மதிப்பில் ஒரு வீடும் வைத்துள்ளார். இதைத்தவிர 31 கோடிக்கு விலையுயர்ந்த கார்களையும் வாங்கி குவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் கிறிஸ்டியானோ ரொனால்டோ, ரோஜர் ஃபெடரர், செர்ஜியோ ரேமோஸ், வெய்ன் ரூனி போன்ற பிரபலங்களுக்கு மத்தியில் உலக அளவில் முன்னணி பிரபலமாக இருந்துவரும் விராட் கோலி இன்ஸ்டாவிலும் டிவிட்டரிலும் சம்பாதிக்கும் வருமானம் ரசிகர்களை வியக்க வைத்து வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments