என்னவொரு எணர்ஜி? 'லியோ' பாடலுக்கு செம டான்ஸ் ஆடிய இந்தியக் கிரிக்கெட் வீரர்!
Send us your feedback to audioarticles@vaarta.com
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகிவரும் 'லியோ' திரைப்படம் ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் இதில் இடம்பெற்ற 'நா ரெடி தா' பாடல் தற்போது சோஷியல் மீடியாவில் அதிகம் வைரலாகி வருகிறது.
இந்நிலையில் இந்தப் பாடலுக்கு இந்தியக் கிரிக்கெட் அணியில் இடம்பெற்ற முக்கிய வீரரும் ஐபிஎல் போட்டிக்காக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் விளையாடி வருபவருமான வெங்கடேஷ் ஐயர் செம மாஸான நடனத்தை வெளிப்படுத்தியுள்ளார். அதுகுறித்த வீடியோவும் தற்போது சமூகவலைத் தளத்தில் கவனம் பெற்று வருகிறது.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகிவரும் 'லியோ' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் அனிருத் இசையமைத்திருக்கும் இந்தப் படத்தில் நடிகர் விஜய்யே பாடிய 'நா ரெடி தா' பாடல் வெளியாகி தற்போது 40 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து வைரலாகி இருக்கிறது. இதனால் பிரபலங்கள், ரசிகர்கள் எனப் பலரும் இந்தப் பாடலுக்கு நடனம் ஆடி ரீல்ஸ் வெளியிட்டு வருகின்றனர்.
அந்த வகையில் கொல்கத்தா மாநிலத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் ஐயர் லியோ பாடலுக்கு ஆடியுள்ள நடனத்தைப் பார்த்த ரசிகர்கள் உங்களுக்குள் இவ்வளவு எணர்ஜியா எனப் பாராட்டி வருகின்றனர்.
2021 இல் இந்திய அணிக்கு அறிமுகமான இடதுகை பேட்ஸ்மேன் வெங்கடேஷ் ஐயர் இதுவரை இந்திய அணிக்காக 2 ஒருநாள் போட்டி, 9 டி 20 போட்டிகளில் விளையாடியுள்ளார். மேலும் கொல்கத்தா அணிக்காக 16 ஆவது ஐபில் சீசனில் கலந்துகொண்ட இவர் 14 போட்டிகளில் விளையாடி 404 ரன்களை எடுத்தார். மும்பை அணிக்கு எதிரான போட்டியில் இவர் அரைச்சதம் அடித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கொல்கத்தா அணி வீரரான வெங்கடேஷ் ஐயர் லியோ பாடலுக்கு செம மாஸுடன் நடனம் ஆடிய வீடியோ இணையத்தில் வைரலாகி அது ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுவருகிறது.
Cricketer #VenkateshIyer dances for #NaaReady song ❤️ @anirudhofficial pic.twitter.com/ExLrhIQqip
— Vijay Fans Updates (@VijayFansUpdate) July 1, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com