விஷ்ணு விஷாலின் 'எஃப்.ஐ.ஆர்' டிரைலரை பாராட்டிய பிரபல கிரிக்கெட் வீரர்!

விஷ்ணு விஷால் நடித்த ‘எஃப்.ஐ.ஆர்’ திரைப்படம் வரும் 11-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது. இந்த ட்ரெய்லர் மிகப்பெரிய அளவில் வைரல் ஆனது என்பதும் மில்லியன் கணக்கானோர் இந்த டிரைலரை பார்த்து படத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

‘ராட்சசன்’ படத்திற்கு பிறகு விஷ்ணு விஷாலுக்கு திருப்புமுனையை தரும் படமாக ‘எஃப்.ஐ.ஆர்’ படம் இருக்கும் என்றும் பல திரையுலக பிரபலங்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்த திரைப்படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் ரிலீஸ் செய்வதால் மிகப்பெரிய அளவில் புரமோஷன் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் பிரபல இந்திய கிரிக்கெட் அணியின் பிரபல வீரர் அஸ்வின் ‘எஃப்.ஐ.ஆர்’ திரைப்படத்தின் டிரைலரை பார்த்து தனது டுவிட்டரில் பாராட்டு தெரிவித்துள்ளார். மிக அபாரமாக டிரைலர் இருப்பதாகவும் இந்த படத்தை மிகப்பெரிய அளவில் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருப்பதாகவும் வழக்கம்போல் நீங்கள் திரைக்கதையை தேர்வு செய்வதில் சிறந்தவராக உள்ளீர்கள் என்றும் பாராட்டு தெரிவித்துள்ளார்.

அஸ்வினின் இந்த கருத்துக்கு பதிலளித்து உள்ள விஷ்ணு விஷால் உங்களது கருத்துக்கு நன்றி என்றும் நீங்கள் எதிர்பார்த்தபடி நிச்சயம் படம் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.